உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்து உள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
’’நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் மாவட்ட கழகத்திடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று, தாம் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் குறிப்பிட்டு 5.9.11 முதல் 12.9.11 வரை மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் கொடுக்க வேண்டும்.
மாவட்ட கழக அலுவலகத்தில் படிவம் பெற இயலாதவர்கள், முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ளபடி விண்ணப்பப் படிவம் தயாரித்து, மாவட்ட கழகத்தில் வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கான தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் இந்த கட்டணத்தில் பாதித் தொகையை செலுத்தினால் போதுமானது. விண்ணப்பப் படிவத்தை ரூ.10 கொடுத்து மாவட்ட கழகத்தில் இருந்து வாங்கி, பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட செயலாளர்/பொறுப்பாளரிடம் அல்லது தலைமைக் கழகத்தில் கொடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரமும், மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரூ.5 ஆயிரம், நகர மன்றத் தலைவர் ரூ.10 ஆயிரம், நகர மன்ற உறுப்பினர் ரூ.2 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment