கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

ஆசிரியர் தினம் : கலைஞர் வாழ்த்து


ஆசிரியர் தினம் 05.09.2011 அன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு

சிறப்பாகப் பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு �நல்லாசிரியர் விருது“ என வழங்கப்பட்ட பெயரை மாற்றி, �டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது“ என வழங்கிட ஆணையிட்டதை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவுகூர்கிறேன்.
�ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்“ என அண்ணா கூறிய மொழிகளை நினைவில் கொண்டு, திமுக ஆட்சியின்போது, ஆசிரியர்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்திடும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு, ஆசிரியர் குடும்பங்கள் பயனடைந்துள்ளதை அனைவரும் அறிவர்.
குறிப்பாக, 2006ல் திமுக அரசு பதவியேற்ற இரண்டு வாரங்களில் 46 ஆயிரம் ஆசிரியர்கள் பெற்று வந்த தொகுப்பூதியத்தை ரத்து செய்து, அவர்களுக்கு 1.6.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கியது. மத்திய அரசின் 6வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, ஆசிரியர்கள் பயன்பெற ஆவன செய்தது.
ஆசிரியர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் நான்கு ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய் வரை மருத்துவ உதவிகள் பெற, �புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை“ நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்களை காத்தது போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு ஆசிரியர் குடும்ப நலன்களில் தனிக் கவனம் செலுத்தப்பட்டதை, இந்த வேளையில் நினைவுபடுத்திட விழைகிறேன்.
தற்போது, பொறுப்பேற்றுள்ள அரசு, அதிகார வெறிகொண்டு முடக்க நினைத்த சமச்சீர் கல்வித் திட்டம், உச்ச நீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள் ளது. இந்தக் கல்வியாண்டுக்குரிய 200 பள்ளி வேலை நாட்களில் 60 பள்ளி வேலை நாட்களுக்கு மேல் புத்தகங்கள் இல்லாமல் கழிந்ததால், இந்த ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதை மனதில் கொண்டு சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு சீரிய முறையில் பாடங்களை கற்பித்திட வேண்டுமென ஆசிரியர்களை கேட்டுக் கொண்டு; ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment