கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

ஜனநாயகம் இல்லாமல் சர்வாதிகார பாணியில் சட்டமன்றம் நடக்கிறது : திமுக சட்டமன்ற கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேட்டி


சட்டப்பேரவை வளாகத்தில் திமுக சட்டமன்ற கட்சி துணை தலைவர் துரைமுருகன் அளித்த பேட்டி:
அநீதி இழைத்தாலும் பொறுத்துக் கொண்டும், ஒரே இடத்தில் இடம் ஒதுக்காவிட்டாலும், வீண் பழி சுமத்தினாலும் கூட ஜனநாயக பணியை ஆற்ற வேண்டும் என்ற எங்கள் தலைவருடைய கட்டளைக்கு ஏற்ப சட்டப்பேரவைக்கு வந்தோம்.ஆனால், திட்டமிட்டே திமுகவின் மீதும், திமுக தலைவர் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண்பழியை சுமத்தி கொண்டிருக்கும் காரியத்தை சட்டப்பேரவையில் சபாநாயகரும், ஆளுங்கட்சியினரும் நிறைவேற்றினார்கள்.
கவன ஈர்ப்பு தீர்மானம் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியிலே இருந்து, இப்போது அதிமுகவில் சேர்ந்திருக்கும் ஒரு உறுப்பினர் தவறான செய்திகளை திருத்தி சபையிலே பேசினார். எங்கள் தலைவர் நிலத்தை அபகரித்திருக்கிறார், ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்றும், அறிவாலயத்திலும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்றும் சொன்னார். வரம்பு மீறி திமுகவே ஒரு கொள்ளை கூட்டம், கொள்ளையடிக்கின்ற கும்பல், கூட்டு களவானி கும்பல் என்ற வகையில் சரமாரியாக பேசினார்.
இப்படி ஒரு உறுப்பினர் சொல்வதை எப்படி கேட்டு கொண்டிருக்க முடியும். இதை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். திமுகவில் உள்ள லட்சக்கணக்கான பேரும் கொள்ளை கூட்டம் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. சபாநாயகர் கவனத்தை ஈர்க்க பாயின்ட் ஆப் ஆர்டர் எழுப்புவது வழக்கம். நானும் அந்த முறையில்தான் பேசினேன். ஆனால் முடியாது என்று கூறி சபாநாயகர் உள்பட அனைவரும் எங்களை வெளியேற்றுவதிலேயே முற்பட்டனர்.
கருணாநிதி வீட்டிற்கு பின்னால் ஒரு ஓடை இருந்ததாம், அந்த ஓடையை அவர் அபகரித்துள்ளாராம். அங்கே ஒரு காலத்தில் இருந்த ஓடை இப்போதெல்லாம் வற்றிப்போய் பக்கத்தில் இருப்பவர்களால் வீடு கட்டி அவர்களும், மற்றவர்களும் போகின்ற வழியாகி விட்டது. அந்த இடத்தை அவர் ஆக்கிரமிக்கவில்லை. அந்த இடத்தில் அவருக்கு பாதுகாப்பாக இருக்கின்ற போலீஸ்காரர்கள் அங்கே நிழலிலே தங்கி கொண்டிருக்கிறார்கள்.
அவர் ஆக்கிரமித்து ஏதோ குடித்தனம் நடத்தவில்லை. அதே போன்று அண்ணா அறிவாலயத்திற்கு முன்னால் காலியாக இருக்கின்ற �வேகன்ட் லேன்ட்� இடத்தை சட்டப்படி பூங்காவாக மாற்றி அரசினுடைய ஆணை பெற்றுள்ளோம். அதிலும் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் கிடையாது.
நாங்கள் அரசாங்கத்தின் நிலத்தையோ, சாலைகளையோ ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஆனால், அதை பேச விடமாட்டேன் என்று சபாநாயகர் தடுத்த காரணத்திற்காக வெளிநடப்பு செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சட்டமன்றத்தில் இருக்க வேண்டும், மக்கள் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று வருகிறோம். ஆனால், நாங்கள் வருவது அவர்களுக்கே பிடிக்கவில்லை. சட்டமன்றம் சர்வாதிகார பாணியிலே நடக்கிறது. ஜனநாயக பாணியில் நடக்கவில்லை.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் 05.09.2011 அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் சக்கரபாணி, தங்கம் தென்னரசு, புஷ்பலீலா ஆல்பன், டி.ஆர்.பி.ராஜா, கம்பம் ராமகிருஷ்ணன், சிவசங்கரன் ஆகியோர் அவைக்கு வந்தனர். கேள்வி நேரத்தின்போது சில திமுக உறுப்பினர்கள் துணைக் கேள்விகள் கேட்டனர். கேள்வி நேரம் முடிவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் வந்தார்.

அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் பேசிக்கொண்டு இருக்கும்போது
துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி அளிக்கும்படி எழுந்து நின்றனர். இதற்கு பதிலடியாக அமைச்சர் கோகுல இந்திரா உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று துரைமுருகன் மற்றும் திமுக உறுப்பினர்களை உட்காரும்படி சத்தம் போட்டு கூறினர்.
ஆனாலும் திமுக உறுப்பினர்கள் யாரும் உட்கார மறுத்து, �இதற்கு பதில் சொல்ல உரிமை உள்ளது, பேச அனுமதியுங்கள்� என்று தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் பேரவைத் தலைவர் பேச அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் 15 நிமிடம் கூச்சல், குழப்பம் நிலவியது.
திமுக உறுப்பினர் செல்போன் பறிமுதல் :
அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவரது பேச்சுக்கு பதில் கூற திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். மற்ற அதிமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று மாறி மாறி கூச்சல் போட்டனர். இதனால் சில நிமிடங்களில் அவையில் ஒரே கூச்சலாக இருந்தது. இந்த சமயத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது செல்போனை �ஆன்� செய்து சபை நடவடிக்கைகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அமைச்சர் ஒருவர், பேரவைத் தலைவரிடம் நேரில் போய் புகார் கூறினார். இதையடுத்து டி.ஆர்.பி.ராஜாவின் செல்போனை பறிமுதல் செய்யும்படி காவலர்களுக்கு பேரவை தலைவர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
பேரவையில் செல்போன் பயன்படுத்தியதாக அவர் மீது கூறப்பட்ட புகார் உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


No comments:

Post a Comment