நில அபகரிக்க முயன்றதாக கேகே நகர் 12வது செக்டார் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, 06.09.2011 அன்று மாலை தனசேகரன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரை வடபழனி போலீசார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போய் அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
இரவு 9.30 மணிக்கு அவரை போலீசார் சைதாப்பேட்டை 17வது கோர்ட் மாஜிஸ்திரேட் பிரியா வீட்டுக்கு கொண்டு போய் ஆஜர்படுத்தினர். ஆனால், அவர் அடுத்த நாள் காலை அழைத்து வருமாறு கூறிவிட்டார். பிறகு அவரை போலீசார் இரவு முழுவதும், வடபழனி போலீஸ் நிலையத்தில் வைத்தனர். இதைத்தொடர்ந்து, 07.09.2011 அன்று காலை சைதாப்பேட்டை கோர்ட்டு தனசேகரன் கொண்டு வரப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். தனசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதை அறிந்து ஏராளமான திமுகவினர் கோர்ட் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பாதுப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, தனசேகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு 08.09.2011 அன்று விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment