கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

அக்.13 திருச்சி இடைத்தேர்தல் : தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அமைச்சர் மரியம்பிச்சை மறைவையொட்டி திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்று, அதிமுக அரசின் அமைச்சரவையில் இடம்பிடித்தவர் மரியம்பிச்சை. சிறுபான்மை பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவர், கடந்த மே 23ம் தேதி காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது, திருவடக்குறிச்சி பகுதியில் லாரி மீது கார் மோதியதில் அமைச்சர் மரியம்பிச்சை இறந்தார்.
இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக 06.09.2011 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மேற்கு தொகுதிக்கான தேர்தல் விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது. 19ம் தேதிமனு தாக்கல் தொடங்குகிறது. 26ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள். 27ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 29ம் தேதி இறுதி நாள். வரும் அக்டோபர் 13ம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 17ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் - செப். 19
மனு தாக்கல் செய்ய இறுதி நாள் - செப். 26
மனு பரிசீலனை - செப். 27
மனு வாபஸ் பெற கடைசி நாள் - செப். 29
வாக்குப்பதிவு நாள் - அக். 13
வாக்கு எண்ணிக்கை - அக். 17
உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 20ம் தேதிக்குள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்துடன் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் முன்கூட்டியே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்கள்:
ஆந்திராவில் பன்ஸ்வாடா தொகுதி, அரியானாவில் ஹிசார், மகாராஷ்டிராவில் கடாக்வாசலா, பீகாரில் தரண்டா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக் கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி வெற்றி பெற்றார்.
பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் ஆட்சியை பிடித்து முதல்வராகவும் ரங்கசாமி பெறுப்பேற்றார். கடந்த மே 23ம் தேதி இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திரா நகர் தொகுதிக்கும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 17ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment