கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

கே.என்.நேருவை 3 நாள் கஸ்டடி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் நேருவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை கோர்ட் நிராகரித்தது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக நிலம் வாங்கியது தொடர் பாக துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் கொடு த்த புகாரின்பேரில் முன் னாள் அமைச்சர் நேரு உள் பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேருவை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நில மோ சடி தடுப்பு பிரிவு டிஎஸ்பி மாத வன் ஜெ.எம்.4 கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதன் விசாரணை 05.09.2011 அன்று நடந்தது. இதற்காக கடலூர் சிறையில் இருந்து நேரு, திருச்சி அழைத்து வர ப்பட்டார். காலை 10.45மணி க்கு ஜெ.எம்.4 நீதிபதி புஷ்ப ராணி முன் நேரு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது, போலீஸ் கஸ் டடி விசாரணைக்கு செல்கிறீர்களா? என நேருவிடம் நீதிபதி கேட்டார். அதற்கு, போலீஸ் கஸ்டடியில் செல்ல விருப்பமில்லை. கோர்ட்டிலேயே விசாரணை நடத்துங்கள் என நேரு கூறினார். நேரு சார்பில் வக்கீல் அருள் மொழி வர்மன் ஆஜராகி வாதாடியது:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குடமுருட்டி சேகர் திருச்சி அருகே நடைபெற்ற இரட்டை கொ லைச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டவர். எனவே போலீசார் நேருவை போலீஸ் காவலில் எடுத்து அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து பெற வாய்ப்பு உண்டு. அதேபோல் இந்திய தண்ட னைச் சட்டம் 167(3)ன்படி ஒருவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரும் போது எந்த காரணத்திற்காக அவரை கஸ்டடி எடுக்கிறோம் என குறிப்பிடவேண்டும்.
ஆனால் போலீசார் கொடுத்துள்ள மனுவில் அவ்வாறு எந்த காரணமும் குறிப்பிடவில்லை. மேலும் ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் குடமுருட்டி சேகர் ஆகியோரை போலீ சார் காவலில் வைத்து விசா ரிக்க முயற்சி மேற்கொண்டனர். அனுமதி கிடைக்கவில் லை என்பதால் தற்போது நேருவை காவலில் எடுக்க முயற்சி செய்கின்றனர். இதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்த நபரை காவலில் கேட்பார்கள்.
போலீஸ் காவல் தொடர் பான எந்தவித காரணத்தை கூறாதவரை கோர்ட் அனுமதி கொடுக்க கூடாது என வாதிட்டார்.
முதல் வகுப்பு மறுப்பு :
முன்னாள் அமைச்சர் நேரு ஒரு விஐபி அந்தஸ்தில் இருப்பவர். அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை கோர்ட் ஏற்றுக்கொண்டு முதல் வகுப்பு வழங்கலாம் என கூறியது. ஆனால் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என உத்தரவு இருந்தால் மட்டுமே முதல் வகுப்பு வழங்க முடியும் என சிறை அதிகாரிகள் கூறுகின்றனர் என வக்கீல் அருள்மொழி வர்மன் கூறினார்.

ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் :

முன்னாள் அமைச்சர் செல்வராஜ், என்.கே.கே.பி.ராஜா, திமுக வெளியீட்டு செயலானர் திருச்சி செல்வேந்திரன் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கோர்ட் முன்பு கூடியிருந்தனர். ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

போலீசாரால் சமாளிக்க முடியாததைப் பார்த்த கே.என்,நேரு, வேனை விட்டு இறங்கி தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தினார்.


No comments:

Post a Comment