கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 4, 2011

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ரோசய்யாவுடன் கலைஞர் சந்திப்புதமிழக ஆளுநர் ரோசய்யாவை திமுக தலைவர் கருணாநிதி 02.09.2011 அன்று திடீரென்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பொறுப்பு ஏற்றுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி 02.09.2011 அன்று காலை 11 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதியின் வாழ்த்து கிடைத்ததற்காக, ஆளுநர் ரோசய்யா நன்றி தெரிவித்தார். இருவரும் அரை மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர், தனது குடும்பத்தினரை ரோசய்யா, கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துரைமுருகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், நிருபர்களிடம் கருணாநிதி கூறியது:
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய ஆளுநர் ரோசய்யா, நீண்டகாலமாக நான் அறிந்த நண்பர். அவரை மகிழ்ச்சியோடு பாராட்டிட, மரியாதை நிமித்தம் இன்று சந்தித்தேன்.
3 கைதிகள் தூக்கு தண்டனை குறைப்பு பற்றி பேசினீர்களா?
பேசவில்லை. நான் இப்போது சந்தித்ததெல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். வேறு விஷயங்கள் எதுவும் பேசவில்லை.
அரசு கேபிள் டிவி இன்று தொடங்குகிறார்கள். உங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்டது, சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார்களே?இது வளர்ச்சி பெறுமா?
மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment