![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRZ73i1T7gTnF_A5korLLGTxYj_iorqjL-eMOzTwKc_qxYcwSBYYWTgYOVbh_-u5PpFrS-OaUB0ditHICD98KMzD8Q02EUi45b6zSUaiFoERF6dQXSYqslTAXZfEA32zfY7QLU1FK61CQ/s400/G.jpg)
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, அவரது தம்பி ஈஸ்வரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை வில்லாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (33). கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பாண்டியராஜனை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி(36), அவரது தம்பி ஈஸ்வரன்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்ஸார் கோபி மற்றும் ஈஸ்வரன் மீது 2009 மே 6ம் தேதி அடிதடி தகராறில் ஈடுபட்டதாக ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த 2 வழக்குகளின் அடிப்படையில் எஸ்ஸார் கோபி மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி அஸ்ராகார்க், கலெக்டர் சகாயத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவு திருச்சி சிறையில் உள்ள எஸ்ஸார் கோபி மற்றும் மதுரை சிறையில் உள்ள ஈஸ்வரனிடம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment