நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கோவை மத்திய சிறை வளாகத்தில் கைது செய்த போலீசார், அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி, பிரிமியர் மில் நிலப்பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வந்த போது அவரை, தாசநாயக்கப்பட்டியில் பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 38 நாட்களுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, கடந்த செவ்வாய்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன்கிடைத்தது. 05.09.2011 அன்று சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவரை, வெளியே கொண்டு வர இருந்த நேரத்தில், சேலம் போலீசார் அவர் மீது திடீரென இன்னொரு நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
சேலம் கோயமுத்து�ர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர் பிரேம்நாத்துக்கு சொந்தமான 12,676 சதுர அடி நிலம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2007ம் ஆண்டு அபகரிக்க முயற்சி செய்ததாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, ஓய்வு பெற்ற தாசில்தார் ஸ்ரீரங்கநாதன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 05.09.2011 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார், வாரண்ட் கேட்டு 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது ஆவணங்கள் முறையாக இல்லாததை கண்டித்த நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, போலீசாரின் மனுவை திருப்பி அனுப்பி விட்டார்.
இந்நிலையில், ஜாமீன் பெற்றுள்ள வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வந்தால் சிறை வாயிலில் கைது செய்ய போலீசார் கோவை சிறை வாயிலில் காத்திருந்தனர். சேலம் நீதிமன்றத்திலிருந்து தபாலில் சென்ற ஜாமீன் மனு 06.09.2011 அன்று பகலில் கோவை சிறை அதிகாரிகளின் கையில் கிடைத்தது. இதற்கிடையில் சேலம் நீதிமன்றத்தில் வாரண்ட் கேட்டு போலீசார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, வாரண்டுக்கு அனுமதி வழங்கினார்.
இத்தகவலை கோவையில் முகாமிட்டுள்ள போலீசாருக்கு சேலம் போலீசார் தெரிவித்த நிலையில், 06.09.2011 அன்று பகல் 1.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார்மீண்டும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
இரவு 8 மணிக்கு அய்யந்திருமாளிகையில் உள்ள 4வது நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா வீட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த தகவல் கேள்விப்பட்ட சேலம் மாவட்ட திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சேலம் அஸ்தம்பட்டியில் நீதிமன்ற வளாகத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை காண திரண்டனர்.
இந்த தகவல் கேள்விப்பட்ட சேலம் மாவட்ட திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சேலம் அஸ்தம்பட்டியில் நீதிமன்ற வளாகத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை காண திரண்டனர்.
8.15 மணிக்கு வெளியே வந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கையை பிடித்து போலீஸ் ஏ.டி.சி.ராசராசன் இழுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர், “நான் ஒரு நோயாளி. என்ன நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என யாராவது கேட்டீர்களா?,” என கேட்டார்.
அப்போது அங்கிருந்த அவரது மகள், மகன், மருமகள் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். �கோவை சிறையில் இருந்து 1 மணிக்கு கைது செய்துள்ளீர்கள். இரவு 8 மணிக்கு சேலம் கொண்டு வந்து இருக்கிறீர்கள். எங்களது அப்பாவை எங்கெல்லாம் கொண்டு சென்றீர்கள்? ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள்? என்று கேட்டனர். உடனே வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினரை 30க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தை உள்ளே அழைத்து சென்றனர்.
பின்னர் நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் உடல்நலம் கருதி சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை போலீசார் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லாமல், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி அழைத்து சென்றனர். நீண்ட நேரமாகியும் அவரை சேலம் சிறைக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், அவரை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். நிர்வாக காரணங்களுக்காக சேலம் சிறையில் இருந்து அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறரை மணி நேரம் அலைக்கழிப்பு :
வழக்கமாக கோவையில் இருந்து சேலம் வருவதற்கு 3.30 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால் 1.30 மணிக்கு புறப்பட்ட போலீஸ் வாகனம் இரவு 8 மணிக்கு சேலம் வந்து சேர்ந்தது. சுமார் ஆறரை மணி நேரம் போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அலைக்கழித்ததாக அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோவையில் இருந்து அவினாசி, பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம் வருவதற்கு பதிலாக, கோவையில் இருந்து அவினாசி, பெருந்துறை, பவானி, மேட்டூர் வழியாக அவரை சேலம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment