கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம் : சட்டமன்ற ஜனநாயக மரபு நீர்த்து போகிறது - துரைமுருகன்சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் 06.09.2011 அன்று கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். �திமுக உறுப்பினர்களை பேசவிடாமல் செய்வதன்மூலம் சட்டமன்ற ஜனநாயக மரபு கொஞ்சம், கொஞ்சமாக நீர்த்து போகிறது” என்று துரைமுருகன் கூறினார்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்
சொன்ன கதைக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று, ‘�இதற்கு நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும். எங்களுக்கு பேச அனுமதி தர வேண்டும்” என்று குரல் கொடுத்தனர். பேச அனுமதிக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் கேட்டனர். ஆனால், “அமைச்சர் பதில் அளித்து கொண்டு இருக்கிறார். அனைவரும் அமருங்கள்’’ என்று பேரவை தலைவர் கூறினார். ஆனால் திமுக உறுப்பினர்கள் அமர மறுத்து, பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து சத்தம் போட்டனர்.
அமைச்சர் செங்கோட்டையன்:
அமைச்சர் பேசும்போது இடைமறித்து அவை நடவடிக்கைக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள். அதற்கு அனுமதிக்க கூடாது.
அமைச்சர் கே.பி.முனுசாமி:
இன்று திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுக்கிறார்கள். நேற்றும் அவர்கள் தலைவர் பற்றி பேசும்போது இப்படி எழுந்து நின்று குரல் கொடுத்து இருந்தால் பாராட்டியிருப்போம். (திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு).
ஓ.பன்னீர்செல்வம்:
உறுப்பினர்கள் ஏதாவது பேச முற்பட்டால் பேசலாம். அதை விட்டுவிட்டு கையை நீட்டி பேசுவதை ஏற்க முடியாது.
பேரவைத் தலைவர்:
அமருங்கள், இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவீர்கள்.
திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டு இருந்ததால் அவர்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். திமுக உறுப்பினர் சிவசங்கரன் தொடர்ந்து சத்தம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
செங்கோட்டையன்:
சிவசங்கரனை வெளியேற்றும் காவலர்களை அவர் அடிக்கிறார்.
பேரவை தலைவர்:
காவலர்களை அடித்ததாக புகார் பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். (திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்களும்குரல் கொடுத்தனர்).
பேரவைத் தலைவர்:
இறுதியாக எச்சரிக்கிறேன். எல்லாரும் அமருங்கள். (அப்போது கூச்சல் அதிகரித்தது.) இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். திமுக உறுப்பினர்கள் எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தங்கம் தென்னரசு, மைதீன்கான், சக்கரபாணி ஆகியோர் பேச வாய்ப்பு அளிக்குமாறு கேட்டனர்.
பேரவை தலைவர்:
அன்பழகனை வெளியேற்றுங்கள். பின்வரிசையில் இருக்கும் திமுக உறுப்பினர் களையும் வெளியேற்றுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள்.
பேரவையில் இருந்து 06.09.2011 அன்று திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் பேரவை வளாகத்தில் பேரவை திமுக துணை தலைவர் துரைமுருகன் அளித்த பேட்டி:
வழக்கமாக நாங்கள்தான் வெளியேறுவோம். ஆனால், சபாநாயர் எங்களை வெளியேற்றியிருக்கிறார். இன்றைக்கு அமைச்சர் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளார். மானிய கோரிக்கைக்கு பதில் அளிப்பது என்பது வேறு. ஆனால், திமுகவை வசைபாடுவதையே அறிக்கை முழுவதும் படித்துள்ளார். அதிலே வரிக்கு வரி திமுகவினர் மீதும், கருணாநிதி பற்றியும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அதையும் மிஞ்சி கதை சொல்கிறேன் என்று, மேதாவித்தனமாக முற்பட்டு அந்த கதையில் சபையில் இல்லாதவர் பெயர்களை இழுத்து பேசியிருக்கிறார்கள்.
அவையிலே இருக்கின்ற ஒரு உறுப்பினரை பற்றி இன்னொரு உறுப்பினர் குற்றச்சாட்டை சாட்டுவது சட்டப்படி தவறு. சபாநாயகர் அதை அனுமதிக்க கூடாது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பற்றி குற்றச்சாட்டுகளை அளவற்று சொல்லிக்கொண்டே போவது முறை தானா என்று உறுப்பினர் கேட்டார்கள்.
2வதாக அவையில் இல்லாதவரை பற்றி பதில் சொல்லுகின்ற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாத காரணத்தினால் அவர்களை பற்றியும் பேசக் கூடாது. ஆனால், மத்திய அமைச்சர் அழகிரி பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினோம். நீக்க மறுத்ததால் வெளியேறுகிறோம் என்று உறுப்பினர்கள் சொன்னார்கள். ஆனால், கையை தூக்கினார்கள், �விரலை காட்டினார்கள். ஆகையால் வெளியேற்றினோம்� என்று சொல்லுகிறார்கள்.
ஆக சட்டமன்ற ஜனநாயக மரபு கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து போகிறது. இது நல்லதல்ல. எதிர்த்து குரல் கொடுப்பதே சட்டமன்றத்தில் இருக்க கூடாது என்ற நிலை இருந்தால் ஜனநாயகம் எங்கே இருக்கும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


No comments:

Post a Comment