கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 4, 2011

2ஜி ஒதுக்கீடு பிரச்னையில் தயாநிதி மாறன் தவறு செய்யவில்லை : உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல்


மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
�2ஜி ஒதுக்கீட்டில் தயாநிதி மாறன் எந்த தவறும் செய்யவில்லை; ஏர்செல் நிறுவனத்தை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க மிரட்டியதாக சிவசங்கரன் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை� என்றும் சிபிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது.
மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவர் மீது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் அளித்தார். கடந்த 2006ல் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ஒதுக்குவதற்கு தயாநிதி மாறன் மறுத்தார் என்றும், அவரது நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு விற்றதாகவும் புகாரில் சிவசங்கரன் கூறியிருந்தார்.
மேலும், ஏர்செல் பங்குகள் விற்கப்பட்டதும், அந்நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டு விட்டது என்றும், இதற்காக அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்பெனி, சன்நெட்வொர்க் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது என்றும் சிவசங்கரன் கூறியிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் தாமாக முன் வந்து விலகினார். இதன்பின், சிவசங்கரன் புகாரை சி.பி.ஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன்பாக 01.09.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004&2007ம் ஆண்டு வரையான காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கியதில் எவ்வித முறைகேடு நடந்ததாகவும் ஆதாரம் இல்லை. யாரையும் நிர்ப்பந்தம் செய்ததாகவும் ஆதாரம் எதுவும் இல்லை. மிரட்டியதாக சொன்ன புகாரில் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில், பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் தொலைதொடர்பு அமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் இருந்துள்ளன. இது பற்றி இன்னும் விசாரிக்க வேண்டும். அப்போது அமைச்சர்கள் குழு தலைவராக செயல்பட்ட அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு சி.பி.ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், �2001&2007ம் ஆண்டு வரையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய விசாரணை இம்மாத இறுதியில் முடிக்கப்படும். இதற்கிடையே, ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும்� என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment