கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

பொய் வழக்குகளில் திமுகவினர் கைதால் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பாதிக்காது : சேலத்தில் ஸ்டாலின் பேட்டி






பொய் வழக்குகளில் திமுகவினரை கைது செய்யும் அதிமுக அரசின் நடவடிக்கைகளால் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி எவ்விதத்திலும் பாதிக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திருச்சி துணைமேயர் அன்பழகன், திருச்செங்கோடு நகரமன்ற தலைவர் நடேசன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்திக்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சேலம் மத்திய சிறைக்கு 02.09.2011 அன்று மதியம் 12.40 மணிக்கு வந்தார். அவரை சேலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் வரவேற்றனர்.
அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வீரபாண்டி ராஜா, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.
துணைமேயர், நகரமன்றத்தலைவர் ஆகிய 2 பேரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பின் 1 மணியளவில் சிறையை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆதாரம் இல்லாமல் திமுக நிர்வாகிகள் மீது அதிமுக அரசு பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இது மேலும் தொடரப் போகிறது. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. எல்லா சிறைகளுக்கும் சென்று அவர்களை பார்க்கும் பெரிய வேலையை எனக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவ்வழக்குகள் போடப்படுகின்றன. இதன் மூலம் திமுகவின் வெற்றி எவ்விதத்திலும் பாதிக்காது. மாறாக அதிகப்படியான இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். கட்சி தலைமையில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி மாவட்டம் தோறும் விருப்பமனு பெறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்பு கூட்டணியை பற்றி தலைவர் முடிவு செய்வார்.
அரசு கேபிள் டி.வியை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அதிமுக அறிவித்தது. அதிமுக அரசு கேபிள் முறையை சரியான வழியில் நடத்தினால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்களை சம்பந்தப்பட்டோர் ஆதாரத்துடன் கொடுத்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஆனால் திமுக நிர்வாகிகளை மட்டும் முதலில் கைது செய்து விட்டு, பின்னர் ஆதாரத்தை ஜோடித்து வருகின்றனர். திமுகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம்.

இவ்வாறு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment