கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 2, 2011

விதிமுறைகளை காரணம் காட்டி நேருவை சந்திக்க அழகிரிக்கு மறுப்பு : கடலூர் சிறையில் பரபரப்பு


விதிமுறைகளை காரணம் காட்டி, கடலூர் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் நேருவை சந்திக்க மத்திய அமைச்சர் அழகிரிக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஆகியோரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் 30.08.2011 அன்று காலை கடலூர் வந்தனர். மத்திய அமைச்சர்களுடன் மதுரை துணை மேயர் மன்னனும் உடன் வந்திருந்தார். திமுக மாநில மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் கடலூர் சேர்மன் தங்கராசு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர்.
பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் நேருவை சந்திக்க எனக்கு அனுமதி அளிக்கவில்லை. மதுரை 3வது வட்ட செயலாளர் ஓச்சுபாலுவை மட்டுமே சந்தித்தேன். திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதுதான் அதிமுகவின் 100 நாள், 150 நாள் சாதனையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஜெயலலிதா இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது பொய் வழக்குகளை திமுக சந்தித்து வருகிறது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.
இவ்வாறு அழகிரி கூறினார்.
திமுக மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி கூறுகையில், “விதிமுறைகளை காரணம் காட்டி, நேருவை சந்திக்க மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்படடுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவரை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டது” என்றார்.
சிறை விதிமுறைகளில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டும் விசாரணை கைதிகளை பார்க்க அனுமதி உண்டு என்றும், செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க மட்டுமே அனுமதி என்றும், இந்த விதிமுறைகளை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் நேருவை சந்திக்க மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று சிறைத்துறையினர் கூறினர்.
அதே நேரத்தில் இந்த விதிமுறைகளை முக்கிய பிரமுகர்கள் வரும்போது தளர்த்தலாம். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு இடமளிக்காமல் கெடுபிடியாக நடந்து கொண்டனர் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment