ஜனநாயகமே இல்லாத இடமாக தமிழக சட்டமன்றம் மாறிவருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி 04.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக �சட்ட மன்றத் தில் ஜனநாயகம் படும்பாடு� என்ற தலைப்பில், மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்தித்துப் பெருமளவுக்கு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
தமிழக சட்ட மன்றத்தில் ஜனநாயகம் இருந்தால் அல்லவா, அது படும்பாடு பற்றி நாம் பேச முடியும்? ஜனநாயகமே இல்லாத ஒரு இடத்தில், எப்படி �அது படும்பாடு� என்று நாம் வருத்தப்பட முடியும் என்பதால்தான், தலைப்பிலே ஒரு திருத்தத்தை இணைக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்� என்று நான் வடசென்னை கூட்டத்தில் உரையாற்றினேன்.
ஜனநாயகத்தின் அடிநாதமே எந்த முனையிலும் அச்சமில்லாத சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான கலந்தாலோசனை, விரிவான விவாதங்கள் என்பவைதான். இன்றைய தமிழக சட்டமன்றத்தில் இந்த அடிநாதம் அறுத்தெறியப்பட்டு, ஜனநாயகத்தின் உண்மை உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலைக்கப்பட்டு வருவதை நாம் காணுகிறோம்; நாட்டினரும் அமைதியாகக் கண்டு வருகிறார்கள். அதனால்தான் ஜனநாயகமே இல்லாத இடமாக தமிழக சட்ட மன்றம் மாறி வருகிறது என்று நான் குறிப்பிட்டேன்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைக் குறை சொல்லிப் பேச வேண்டும் அல்லது பத்தொன்பது ஆண்டு முதலமைச்சராக இருந்த என்னை ஏசிப் பேசவேண்டும் அல்லது �போற்றிப் புராணம்� பாட வேண்டும். இந்த அடிப்படை அம்சங்களைப் பின்பற்றாதவர்களுக்கு அங்கே இடமில்லை.
தேர்தல்கள் முடிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும், பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே அமைத்துக் கொள் வதாக அறிவித்தவர் ஜெயலலிதா. இவ்வளவு பெரிய கொள்கை முடிவினை மேற்கொள்வதற்கு முன் அமைச்சரவையைக் கூட்டி, விரிவாக விவாதிக்க வேண்டாமா? இப்படி, ஆட்சிப் பொறுப்பேற்று சட்டமன்றத்தைத் தொடங்குவதற்கு முன்பே, ஜனநாயகத்துக்கு விடை கொடுத் தவர்கள்தான் அ.தி.மு.க. ஆட்சியினர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. முதல்கூட்டத் தொடரிலேயே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும்கூட விரிவான விவாதங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது இப்படி, அவசரம் அவசரமாக, சட்டமன்றத்திலிருந்து ஜனநாயகத்தை வெளியேற்றத் தொடங்கியவர்கள் அ.தி.மு.க. ஆட்சியினர்.
நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வழங்குவதற்கான நாள் குறிப்பிட்டு, ஆளுநர் ஒப்புதல் பெற்று, அறிவிக்கை செய்ததற்குப் பிறகு, ரூ.4000 கோடி அளவுக்கு பல்வேறு வரி விதிப்புகளை அ.தி.மு.க. ஆட்சியினர் அறிவித்தனர். சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கும், சட்டப்பேரவை நீண்ட நெடிய பாரம்பரிய மரபுகளுக்கும் மதிப்பளிப்பவர்கள், இந்த வரி விதிப்புகளை நிதிநிலை அறிக்கையிலேதான் இணைத்து அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் சட்டப்பேரவையில் பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து, விவாதிக்க வாய்ப்பாக இருந்திருக்க முடியும் என்று கூறிய தற்கு மாறாக ஜனநாயக ரீதியில் வழங்கப்பட் டிருக்கின்ற வாய்ப்பை நசுக்கி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியினர்.
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது தமிழ் நாடி விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம். 8 லட்சத்து 73 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 684 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் இது ரத்து செய்யப்பட்டது. ஜனநாயக ரீதியான விவாதங்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் இடமேது?
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதையும் அதிமுக ஆட்சி ரத்து செய்தது. அன்று, ஜனநாயகம் காற்றோடு காற்றாய்க் கலந்தது.
தமிழகச் சட்டமன்றத்திற்கென்று, சான்றாண்மை மிக்க மரபுகள் உண்டு. அந்த மரபுகளெல்லாம் இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொன்றாய் விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment