நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம�பி ராமஜெயம் 05.09.2011 அன்று அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கலைஞர் அறிவாலயம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதற்காக திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் 12 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சிலர் தன்னை மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் டாக்டர் சீனிவாசன் புகார் அளித்தார். இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் உட்பட 11 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 25ம் தேதி கே.என்.நேரு உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். ராமஜெயம் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை, பொன்மலை உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 05.09.2011 அன்று அதிகாலை துபாய் செல்வதற்காக கொச்சி விமானநிலையத்திற்கு வந்த ராமஜெயத்தின் பாஸ்போர்ட்டை இமிகிரேசன் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது பாஸ்போர்ட் நம்பர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இமிகேரசன் போலீசார், ராமஜெயத்தை கொச்சின் விமான நிலையத்திற்குட்பட்ட நெடும்பாசேரி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். நெடும்பாசேரி போலீசார், திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படை போலீசார் கொச்சி சென்று ராமஜெயத்தை அழைத்து வந்து கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
05.09.2011 அன்று காலை 6 மணிக்கு திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ராஜஜெயம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி உஷாராணி, இவரை திருச்சி சிறையில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார்.
திருச்சி சிறையில் இடமில்லை என்று ராமஜெயத்தை பாளைங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment