பத்ம பூஷண் விருது பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
கணபதி ஸ்தபதி உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 06.09.2011 அன்று மாலை மரணமடைந்தார். இவர் 1926ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் பிறந்தார். சிறந்த வாஸ்து சாஸ்திர நிபுணராக திகழ்ந்த இவர், ஏராளமான கோவில்களை வடிவமைத்துள்ளார். தஞ்சை பல்கலைக்கழக கட்டிடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை, பூம்புகாரில் மாதவி சிலை உள்பட பல்வேறு சிறந்த பணிகளை செய்துள்ளார்.
ஹவாய், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் ஆகமவிதிப்படி ஆலையங்களை நிர்மாணித்து கொடுத்துள்ளார். இவரது உடல் மாமல்லபுரம் அருகில் உள்ள வடகடும்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக 07.09.2011 அன்று வைக்கப்பட்டது. பின்னர் மாலை யில் தகனம் செய்யப்பட்டது.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் பெரிதும் துணையாக இருந்து அந்த பெரும் பணிகளிலே இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அண்மை காலத்தில் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில தினங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னை சந்தித்து விடுவார். அவரது இழப்பு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சிற்ப கலை வல்லுநர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment