கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

திமுக : பொறுப்பாளர்கள் நியமனம்


தி.மு.க.,வில் பொறுப்பாளராக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டிகேஎஸ் இளங்கோவன், பெ வீ கல்யாணசுந்தரம், ஆர் எஸ் பாரதி,அ. ரகுமான்கான், கே எஸ் ராதாகிருஷ்ணன், இரா கிரிராஜன், வெ.ரவி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்கவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க., அரசின் கைது நடவடிக்கைகள் குறித்து கட்சியினர் பொறுப்பாளர்களிடம் புகார் மனு தரலாம் என கூறியுள்ளது.


முப்பெரும் விழா இடமாற்றம் :


தி.மு.க., சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா, சென்னையில் வரும், 30ம் தேதி நடக்கும் என, அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘’தி.மு.க., முப்பெரும் விழா, வரும் 18ம் தேதி, வேலூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த விழா தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை, சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment