கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

உள்ளாட்சி தேர்தல் பணி தற்காலிக பொறுப்பு குழு உறுப்பினர்கள் நியமனம்


திமுக மாவட்ட செயலாளர்கள் சிறையில் இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் பணியை சிறப்பாக செய்ய திமுக தற்காலிக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 05.09.2011 அன்று இரவு வெளியிட்டுள்ள
அறி க்கை:
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது அதிமுக அரசு பொய் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளதால் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட மாவட்ட கழக பணிகள் செவ்வனே நடைபெற பொறுப்புக்குழு தற்காலிகமாக நியமிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களாக எம்.எஸ்.கார்த்திக், உ.மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, கோட்டூர் அ.ராஜசேகரன், எஸ்.ஜோதிராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி சிறையில் உள்ளதால் இ.ராதாமணி, கே.எஸ்.மஸ்தான், தா.உதயசூரியன் பொறுப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர்.
திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு சிறையில் உள்ளதால் எஸ்.ஏ.அம்பிகாபதி, கே.கே.எம்.தங்கராஜா, கே.என்.சேகரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் சிறையில் இருப்பதால் டாக்டர் ஜி.எஸ்.சூடாமணி, எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜேந்திரன், ஏ.மாரியப்பன், ஜி.கே.சுபாசு ஆகியோர் தற்காலிக பொறுப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment