கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 4, 2011

3 பேர் தூக்கு தண்டனை குறைக்க அமைச்சரவையில் முடிவு எடுப்பது முக்கியம் : கலைஞர் பேட்டி


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியதையடுத்து, அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டும் என்பது முக்கியமாகும் என்று கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் கருணாநிதி 01.09.2011 அன்று அளித்த பேட்டி:
அன்றாடம் ஆட்களை குறி வைத்து கைது செய்கிறார்களே?
ஏற்கனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள், இப்போது மீண்டும் தொடர்கின்றன.
உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரப்போகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற்றியை இது பாதிக்காதா?
திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள். இது பாதிக்கிறதா இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியும்.
5ம் தேதி முதல் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே இரண்டு முறை கேட்டும் ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது, உங்கள் அணுகுமுறை எப்படியிருக்கும்?
உங்களைப் போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கிறீர்களோ, அதன்படி நடக்கும்.
பேரவையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழக மக்களிடையே எழுந்த எழுச்சிக்குப் பிறகு, தீர்மானம் நிறைவேற்றுகிற அளவுக்கு முன்வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால், அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
மத்திய சட்ட அமைச்சர், சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே?
சட்ட அமைச்சர் என்ன சொன்னார் என்பது பற்றி சட்ட நிபுணர்களோடு கலந்து பேசித்தான் பதில் சொல்ல முடியும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சிபிஐ அறிக்கை - கருணாநிதி கருத்து :
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் 01.09.2011 அன்று இரவு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆங்கில தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் கெடுபிடி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த அறிக்கையில் சிபிஐ சொல்லி இருக்கிறதே?
ஆதாரம் இருந்ததாகச் சொன்னவர்களும் அவர்கள்தான். ஆதாரம் இல்லை என்று சொல்பவர்களும் அவர்கள்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment