கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 25, 2010

காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு முதல்வர் கலைஞர் ஏற்றி வைத்தார்


சென்னை, ஜூலை 25_ கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளின் போது அறிவித்தது போல், காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கினை முதலமைச்சர் கலைஞர் நேற்று ஏற்றி வைத்தார்.

சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 15ஆம் தேதியன்று காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கலைஞர், காமராஜரின் நினைவு மண்டபத்திற்கு அருகிலே அணையா விளக்கு இல்லையே, அண்ணா நினைவு மண்டபத்திலே இருக்கிறது,

எம்.ஜி.ஆர். நினைவு மண்டபத்திலே இருக்கிறது, ஆனால் காமராஜர் நினைவு மண்டபத்துக்கு அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருக்கிறது. அந்த குறை இருக்கக் கூடாது என்பதால், சென்னையிலே உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு உடனடியாக அமைக்கப்படும், இந்தத் திங்களிலேயே அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவர் சொல்லியபடியே, அறிவித்த 10 நாள்களுக்குள்ளாகவே, கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அணையா விளக்கினை நேற்று தொடங்கி வைத்தார்.

காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் பேசுகையில், காமராஜர் மறைந்து அவருக்கு உரிய இறுதி நிகழ்ச்சிகளையெல்லாம் நான் நேர் நின்று நடத்தி வைத்து அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டு அதன் பிறகு மேலவையில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி. அந்த மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு சொன்னார் காமராஜருக்கு ஒரு சகோதரர் இருந்து, அவர் மறைந்த நேரத்தில் இத்தகைய கடமைகளையெல்லாம் செய்வாரா என்றால், கருணாநிதியைப் போல அந்தச் சகோதரன் செய்யக் கூடுமென்று நான் கருதவில்லை என்று என்னைப் பெருந்தலைவரின் தம்பியாகவே, சகோதரனாகவே ஒப்பிட்டு அன்றைக்குப் பேசினார் என்று நினைவுகூர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியில் அறிவித்தது போலவே, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதனை முதலமைச்சர் கலைஞர் நேற்று மாலை 6.30 மணிக்கு நேரடியாக வந்து ஏற்றி வைத்தார். அங்கு வந்ததும் சில நிமிடங்கள், காமராஜர் பற்றிய நினைவலைகளில் மூழ்கியிருந்த அவர், நினைவிடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, ரிமோட் கருவி மூலம் அணையா விளக்கினை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, பரிதிஇளம்வழுதி, பூங்கோதை, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி சற்குணபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு, பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன், சட்டமன்ற உறுப்பினர் டி.யசோதா, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கருணாகரன் மற்றும் காங்கிரஸ், தி.மு.க கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment