கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 24, 2010

காமராசரின் கல்விப் பணி தி.மு.க. அரசின் சாதனை! முதலமைச்சர் கலைஞரின் கருத்துரை



சென்னை ராணி மேரி கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் மாளிகையை திறந்து வைத்து முதல மைச்சர் கலைஞர் அவர்கள் (22.7.2010) உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:

பெருவெளியில் கடந்த ஒரு வாரத் தில் இரண்டு விழாக்களிலே கலந்து கொள்கிற வாய்ப்பினை நான் பெற்றி ருக்கிறேன். இந்த விழா உங்களுடைய நன்றிப் பெருக்கினை, மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற விழா என்பதை நான் மிக மிக நன்றாக அறிவேன். நம்முடைய துணை முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் தொகுப்புரை வழங்கியோர் இவர்கள் எல்லாம் ஆற்றிய உரை இங்கு வந்துள்ள என்னை வரவேற்கின்ற உரையாக மாத்திரம் அல்லாமல், வேறொரு உதவிக்கு அச்சாரம் போடுகின்ற விழாவாக அமைந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன். நேரம் அதிகமாகி விட்டது. ஆகவே நான் அதுபற்றி யெல்லாம் விரிவாகப் பேச விரும்ப வில்லை.

அச்சார விழா!

அவர்களுடைய குறிக்கோள் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்திற்காக நன்றி கூறுவதற்காக அல்ல என்னை அழைத்தது (சிரிப்பு) கட்டப்பட வேண்டிய கட்டடங்களுக்கு அச் சாரம் போடுவதற்காகத் தான் என்னை அழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை எனக்கு மிகத் தெளிவாகவே புரிந்துவிட்டது. (சிரிப்பு, கைதட்டல்) அதனால் நான் உங்களுக்கு இதைச் சொல்லி ஏமாற்றி விடமாட்டேன். கடந்த காலத்திலே தமிழகத்தில் கல்வி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரப்படாமல், அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்குத் தரப் படாமல், அந்த இல்லங்களிலேயி ருந்து வருகின்ற சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு கல்விக்குப் பதிலாக அவர்கள் கஞ்சிக் கலயங்களை ஏந்து கின்ற நிலைதான் இருந்தது. அது எப்படி மாறிற்று என்பதற்குப் பெருந் தலைவர் காமராஜர் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சியினை யாரும் வர லாற்றை அறிந்தவர்கள் கோடிட்டுக் காட்ட மறந்து விடுவதில்லை. ஒரு நாள் காமராஜர் அவர்கள் தன்னு டைய முதலமைச்சர் பொறுப்பை நிறைவேற்றிட சுற்றுப் பயணம் சென்றபோது, ஓரிடத்திலே இரண்டு, மூன்று சிறுவர்கள் வெறும் கலயத் திலே கையை விட்டுத் துழாவிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந் தார்கள் என்பதையும், அவர்களைப் பார்த்து பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தான் சென்ற காரை நிறுத்தச் சொல்லி, நீங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போகவில்லையா? என்று கேட்டார் என்றும் பள்ளிக் கூடம் போக எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லையே என்று அவர்கள் பதில் சொன்னார்கள் என்றும், பள்ளிக்கூடம் இருந்தால், நீங்கள் படிக்கப் போவீர்களா? என்று கேட்டபோது, படிக்கப் போவோம் ஆனால், படித்து விட்டு, வீட்டிற்குப் போனால் நாங்கள் சோறு சாப்பிட வேண்டுமே, அதற்கு என்ன செய் வது? என்று அவர்கள் திருப்பிக் கேட்க, காமராஜர் உள்ளத்திலே அது வேதனை வேலாகப் பாய்ந்து, இந்தப் பிள்ளைகளுக்கு உணவும் கொடுத்தால், அவர்கள் கல்வி கற்று வாழ முடியும் என்ற ஒரு நம்பிக்கை தழைத்து, அந்த நம் பிக்கையின் அடிப்படையிலே அவர் அதிகாரிகளை அழைத்தார். அப்போது எனக்கு நினைவிருக் கிறது.

காமராசரின் கல்விப் பணி

காமராஜர் காலத்திலே கல்வி அதிகாரியாக திரு. சுந்தரவடிவேலு அவர்கள் இருந்தார்கள். அவரை அழைத்து இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று கேட்டு, இருவரும் ஆழ்ந்து யோசித்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மதிய உணவுத் திட்டம் பிறகு சத்துண வுத் திட்டமாக மாறிற்று என் றாலும்கூட, பள்ளிகளில் இருந்த ஏழைப் பிள்ளைகளுக்கு சாப்பாடு இருந்தால், அவர்கள் நல்ல முறை யிலே படிப்பார்கள் வீட்டைப் பற்றிக் கவலையில்லாமல் படிப் பார்கள் என்ற அந்த எண்ணத்தை உருவாக்கி, அவர்களுடைய உள் ளங்களிலே படிப்பறிவை விதைத்த அந்த முயற்சியிலே வெற்றி பெற் றவர் பெருந் தலைவர் காமராஜர் என்பதை நான் என்றைக்கும் சொல்வேன் இன்றைக்கும் சொல் வேன். அதற்குப்பிறகு, பல மாற்றங் கள் கல்வித் துறையிலே வந்தது. கல்வி பெறுகின்ற மாணவர் களுக்கு என்னென்ன வசதிகள், என்னென்ன வாய்ப்புகள் இவை யெல்லாம் செய்யப்பட்டது என் றாலும்கூட, ஆரம்பத்திலே கல்விக் கண்ணைத் திறந்தவர் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டது காம ராஜர்தான். அதனால்தான், காம ராஜருடைய பிறந்த நாளை மலர்களை வைத்துக் கொண்டா டாமல், படங்களை வைத்துக் கொண்டாடாமல், விழா நடத்திக் கொண்டாடாமல் அய்ந்தாவது முறையாக நான் ஆட்சிக்கு வந்த உடனே அறிவித்தேன் காம ராஜர் பிறந்த நாள் கல்விக் கண் திறந்த நாள் என்று கொண் டாடப்பட வேண்டுமென்று நான் அறிவித்தேன். அதுமாத்திரமல்ல தமிழகத்திலே உள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களும், இந்த நாளில் காமராஜருடைய படத்தை வைத்து, சிறப்பித்து, மாலை அணிவித்து, காமராஜருடைய புகழைப் பாடி, காமராஜரால்தான் கல்விக் கண் திறக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை ஊருக்குச் சொல்ல வேண்டும் உலகுக்குச் சொல்ல வேண்டுமென்று காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டமாக்கினேன்.

ஏன் சட்டம் ஆக்கினோம்?

ஏன் சட்டமாக ஆக்கினேன் என்றால், சொன்னால் செய்ய மாட்டார்களா என்றால் செய் வார்கள். ஆனால், சட்டமாக அதை ஆக்காவிட்டால், அடுத்து ஒருவேளை யாராவது ஆட்சிக்கு வந்தால், அதை அவர்கள் மாற்று வதற்கு அவர்களால் முடியும். அரசு ஆணையாக இருந்தால், அடுத்து வருகின்ற அரசு அதை மாற்றிவிடக்கூடும். சட்டமாக அது இருந்தால், மாற்றுவதற்கு சட்டசபையைக் கூட்டவேண்டும். சட்டமன்றத்திலே விவாதம் நடக் கும். சட்டசபையிலே எழுப்பு கின்ற அந்தக் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டும். அதற்குப் பிறகுதான், ஒரு சட்டத்தை மாற்ற முடியும். அதற்காகத்தான் காம ராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்து, அதை சட்டமாகவே ஆக்கினேன் என் பதைப் பெருமையோடு (கைதட் டல்) சொல்லிக் கொள்ளக் கட மைப்பட்டிருக்கிறேன். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், அந்த ஆரம்பத்திற்குப் பிறகுதான், பள்ளிக் கூடங்கள் ஆயிரக்கணக்கிலே கிராமப்புறங்களிலே திறக்கப் பட்டன. கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் வளர்ந்தால் மட்டும் போதாது. அந்தப் பள்ளிகளை இணைக்கின்ற கல்லூரிகளும் அமைக்கப்பட வேண் டும் என்ற முயற்சி திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டது. இங்கே நம்முடைய தம்பி பொன்முடி அவர்கள் குறிப் பிட்டதைப்போல, கல் லூரிகள் நிரம்ப வருவதற்குக் காரணம், இந்த ஆட்சி. காமராஜர் ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஆங்காங்கு, எங்கே நோக்கினாலும், கிராமப் புறங்களை இணைக்கின்ற கல்லூரிகள் இன்றைக்குக் காணக் கிடக்கின்றன என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாதனை (கைதட் டல்) என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். அப்படிக் கல்லூரிகளை ஆரம்பித்த அந்தக் காலத்திற்கு முன்பே, முதல் முதல் ஒரு கல்லூரி சென்னை மாநகரத்தில், அதிலும் பெண்களுக்காக ஒரு கல் லூரி இந்த இராணி மேரி கல்லூரி தொடங் கப்பட்டு, பெரும் புகழோடு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே தொகுப்புரை ஆற்றிய அம்மையார் அவர்கள் நாங்கள் வீரத்தோடு இந்தக் கல்லூரியிலே பணிபுரிகி றோம் என்றெல்லாம் சொன்னார்கள்.

பெண்களின் வீரம்!

பெண்களுக்கு வீரம் இயற்கையா னது. அது ஆண்களுக்கு மாத்திரமே உரியது அல்ல. பெண்கள் வீரமான வர்கள் பெண்களுடைய வீரம் அவர்கள் காட்டுகின்ற அந்த வீர உணர்வு அவர்களுடைய பிள்ளைகள் மூலமாக, அவர்களுடைய மக்களின் மூலமாக வெளிப்பட்டு நாட்டையே காப்பாற்றக்கூடிய அந்த ஆற்றலைப் பெற்ற நிலை சரித்திரங்களிலே பல இடங்களிலே காண முடிகிறது. அப் படிப்பட்ட நிலைக்குரியவர்கள் பெண்கள். அந்தப் பெண்களுடைய பாசறையாக விளங்குவதுதான் தமி ழகத்தில் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், இந்த இராணி மேரி கல்லூரியாகும் (கைதட்டல்). இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.

முன்னதாக இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி வரவேற் புரையாற்றினார்.

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment