கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

கலைஞர் காப்பீட்டு திட்டத்தை குறை சொல்வதா? உண்மை தோற்காது வஞ்சகம் ஜெயிக்காது


‘கலைஞர் காப்பீட்டு திட்டம் இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடு இருந்திருக்கவே மாட்டோம்’ என்று கண்களில் நீர்மல்க சொன்ன போது எனக்கு பெருமிதமாகவும் இருந்தது; இதை ஊழல் திட்டம் என்று பேசுவோரை நான் பொருட்படுத்தவில்லை; உண்மை ஒரு நாளும் தோற்காது & வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது, பயன் பெறும் ஏழை மக்கள் பெறுகின்ற வாழ்வு, வஞ்சகத்தின் வாயை அடைத்து விடும்’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு 23&7&2009 அன்று ‘உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. ஒரு லட்சத்து 53,257 நோயாளிகள் நலம் பெற்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 44 லட்சத்து 45,117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாகக் கடந்த ஓராண்டு காலத்தில் சேர்ந்து, 1 கோடியே 33 இலட்சத்து 60,439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடங்கும்பொழுது இந்தத் திட்டம் நிறைவேறுமா? ஆண்டுதோறும் முழுமை பெறுமா? என்றெல்லாம் ஐயம் எழுப்பியோர் எண்ணிக்கையும் நமக்குத் தெரியும். ஆனால்; இந்த அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பழித்தே பழகி விட்ட, பித்து மனங்களுக்கு இந்தத் திட்டம் & இப்போது ஓராண்டு நிறைந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது & கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு பரிகாரம் பெற்றோர் & மரணத்தை எட்டிப் பார்த்து மறுவாழ்வு பெற்றோர் & எத்தனை பேர் என்ற கணக்கு நம்மைக் களிப்பில் அல்லவா ஆழ்த்துகிறது! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒன்றிரண்டை மாத்திரம் விளக்கிச் சொல்கிறேன்.
* செங்கல்பட்டு, மணிவாக்கம் பகுதியை சார்ந்த 55 வயது ராமதாஸ்; மூளையில் இரத்த கட்டி உறைவு நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காப்பீடு திட்டத்தின் கீழ் 60,000 வழங்கப்பட்டது.
* திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வேலம்பட்டியை சார்ந்த .வீரப்பனுக்கு நாவில் புற்று நோய்; அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பூரண நலத்துடன் வீடு திரும்பினார். காப்பீட்டில் 36,600 ரூபாய் அளிக்கப்பட்டது.
* தாம்பரம் லெட்சுமி நகரைச் சேர்ந்த, 45 வயதான சரவண ஐயர்; பித்தப்பை சம்பந்தமான புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இப்போது நலமுடன் உள்ளார். ஒரு லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
* தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினரான உடுமலைப்பேட்டை, கே. வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த டி.தங்கவேலு மகள் செல்வி சரண்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பொள்ளாச்சியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற இவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.
* ஆண்டிப்பட்டி, ஒக்கரைப்பட்டியை சார்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பள்ளி செல்லும் முனியாண்டிக்கு இதய நோய் அறுவை சிகிச்சைக்கான முழு செலவான ரூ. 60,000 காப்பீட்டு திட்டம் மூலம் செலுத்தப்பட்டு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.
* சேலம் மகுடஞ்சாவடி, தனலட்சுமி அம்மாள் விபத்தில், கை துண்டாகி விட்டது. விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள் மைக்ரோ சர்ஜரி அறுவை சிகிச்சையின் மூலம் துண்டான கை ஒன்று சேர்த்து வைக்கப்பட்டது.
* சுந்தரசேகர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். 52 வயது. இவருக்கு சிறுநீரோடு சேர்ந்து ரத்தமும் கசிந்தது; ஸ்கேன் எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
* திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மதினா, வயது 28. குறவர் வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பல ஆண்டுகளாக இருதயத்தில் கோளாறு. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி செட்டிநாடு மருத்துவ மனையிலே சேர்ந்து இருதய சிகிச்சை நடந்தது.
* வந்தவாசி, குலாத்து£ர் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் செல்வன் முருகன்ல இதய நோயினால் பிறந்தது முதல் அவதிப்பட்டு வந்தான். இவனுக்கு சிகிச்சை செய்ய வசதி இல்லாத ஏழைப் பெற்றோர், அவனுடைய ஆயுள் அவ்வளவு தான் என்று கை விட்டு விட்டனர். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்ல உடல் நலத்தோடு இருக்கிறான்.
* இலங்கைத் தமிழர் மோசஸ், வயது 60; தர்மபுரி மாவட்டத்தில் அகதியாக தங்கியிருக்கிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஓராண்டு காலமாக அவதிப்பட்டு வந்தார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து அதன் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
* கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் இருப்பவர் விக்னேஸ்வரன்,வயது 32; சாலை விபத்து ஒன்றில் சிக்கி, எலும்பு முறிவு முகத்தாடை யில் ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
காப்பீட்டு திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பற்றி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இத்திட்டத்தினால் பயன் பெற்றவர்கள் எல்லாம் இத்திட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, கடந்த 23ம் தேதி என்னை தலைமைச் செயலகத்திலே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் Òஇந்தத் திட்டம் இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடு இருந்திருக்கவே மாட்டோம்Ó என்று நெஞ்சு நெக்குருகச் சொல்லிய போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால் அவர்கள் நோயினால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தோம் என்பதையும், இந்த அளவுக்கு ரூபாய் செலவழித்து தங்களால் சிகிச்சை செய்து கொண்டிருக்கவே முடியாது என்பதையும் கண்களில் நீர் மல்க சொன்ன போது எனக்குப் பெருமிதமாகவும் இருந்தது.
இந்த ஒரு திட்டம் மாத்திரமல்ல; 108 என்ற திட்டத்தினால் தாங்கள் உயிர் பிழைத்தச் செய்தியை தொடர்ந்து சொல்லி பலரும் இந்த அரசைப் பாராட்டுகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஒன்றும் இந்த அரசால் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது போலவே இளஞ்சிறார்களுக்கான இதயப் பாதுகாப்பு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் உயிர்பிழைத்து அவர்கள் என்னைச் சந்தித்து தாங்கள் உயிரோடு இருப்பதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லும்போது நான் என்னையே மறக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டமும் அப்படித்தான். மாற்றுத் திறனாளிகள் கைகால் ஊனமுற்றோர், கண் தெரியாதோர், காது கேளாதோர் சிலர் சென்னை பொது மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றவுடன் பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தேன். உங்களைச் சந்தித்ததே போதும், கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது, உண்ணா விரதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம் என்று அங்கிருந்து எழுந்துச் சென்றார்கள்.
எனவே, இயலாதோர்க்கு உதவிட வேண்டுமென்ற எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தால் அந்த வழியிலே செயல்படுகிறோம்.
இதை ஊழல் திட்டம் என்றும், கோடிக் கோடியாகக் கொள்ளைப் போய் விட்டது என்றும் சிலர் பேசுகிறார்கள் என்றால்; நான் அவர்களைப் பொருட்படுத்தாதற்குக் காரணம் & உண்மை ஒரு நாளும் தோற்காது & வாய்மையை எதிர்த்து வஞ்சகம் ஜெயிக்காது & துரோகத்தையே தங்கள் வாழ்வின் தொடர் நிகழ்ச்சிகளாக ஆக்கிக் கொண்டவர்களால் இது போன்ற து£ய்மையான திட்டங்களின் மீது து£சி படவும் செய்திட இயலாது என்பதை தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டினக் கரை வரையில் நமது திட்டங்களால் பயன் பெறும் ஏழையெளிய சாதாரண மக்கள் பெறுகின்ற வாழ்வு வஞ்சகத்தின் வாயை அடைத்து அதன் இடுப்பை ஒடித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு நாம் நடை போடுவோம்! இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment