கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 8, 2010

அன்று பிரபாகரனை தூக்கிலிடச்சொன்ன ஜெயலலிதா இன்று கண்ணீர் சிந்துகிறார் - வீரபாண்டி ஆறுமுகம்


ஈழத் தமிழர்களுக்காக முதலமைச்சர் கலைஞர் ஆதரவு திரட்டியபோதெல்லாம் எதிராக செயல்பட்டவர் ஜெயலலிதா என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அய்.நா. குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் முதலமைச்சர் கலைஞரைப் பற்றி அவதூறான கருத்துகளை சொல்லியிருப்-பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இலங்கைவாழ் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காத ஜெயலலிதா, இன்று தமிழ் இனத்தினுடைய தலைவியாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்-சிப்-பதை தமிழகமும், தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

தனித்தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடிய ஈழத் தமிழர்-களை, இலங்கையில் அமையும் அரசுகள் எல்-லாம் அவர்களை படு-கொலை செய்வதும், அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதும் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்-பதை வலியுறுத்த முதல-மைச்சர் கலைஞர் 1985 ஆம் ஆண்டு இந்தியா-வில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவழைத்து மதுரையில் தனது தலைமையில்- உரு-வாக்கப்பட்ட டெசோ அமைப்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல்-கட்சித் தலைவர்களை அழைத்-தும் ஈழத்- தமிழர்கள் உரிமைக்காக போராடக்-கூடிய போராளிகளையும் அழைத்து, ஈழத் தமிழர்-கள் சுதந்திரமாக- வாழ்ந்-திட தமிழ் ஈழம் அமைய வேண்டும் என வழி-வகுத்து டெசோ- அமைப்பு ஒன்றை- உருவாக்கி தமி-ழர்களை ஒன்று சேர்த்து தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்டியவர்தான் தலை-வர் கலைஞர்.

அப்போது- அ.தி.-மு.க.வோ அல்லது- அதன் தலைவராக- தற்போது உள்ள ஜெயலலிதாவோ ஆதரவு தெரிவிக்க-வில்லை. 1990-ஆம் ஆண்டு கலைஞரின் கோரிக்-கையை ஏற்று- அன்றைய பிரதமராக இருந்த வி.பி.சிங் தனது இல்லத்-தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களைக் கொண்டு, கூட்டிய கூட்-டத்தில் அந்நாளைய முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரி-டம் ஈழ மக்களுடைய பிரச்சினை குறித்து எடுத்து விளக்கி அவர்-கள் அனைவரின் ஆதர-வையும் தமிழ் ஈழத்திற்-காக திரட்டியவர்தான் நம்முடைய முதலமைச்சர் -கலைஞர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக -சிங்கள ராணுவம் நடத்-தும் யுத்தத்தை -நிறுத்திட, இந்திய அரசை வலியு-றுத்தி அனைத்துக்- கட்சித் தலைவர்கள் கூட்டத்-தைக் கூட்டி, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்துவதுடன் தமிழகத்தில் மிகப்பெரிய மனித சங்கிலி பேரணிகள் மற்றும் கண்டனக் பொதுக்-கூட்டங்களை நடத்தி-யவர் கலைஞர். இதுபோன்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கலைஞர் ஆதரவு திரட்டு-கிறபோதெல்லாம் அதற்கு எதிராக செயல்பட்டவர்-தான் ஜெயலலிதா. கலை-ஞர் டில்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்-தித்து பேசியதற்-கிணங்க இலங்கை ராணுவம் போரை நிறுத்தம் செய்ய வலியுறுத்த, அன்றைய மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த-வரும், இன்றைய நிதி அமைச்சருமான பிர-ணாப் முகர்ஜியை இலங்-கைக்கு அனுப்பி, 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாப்-பான இடங்களில் தங்க வைக்க முயற்சி எடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்.


1991ஆம் ஆண்டு முதல-மைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போ-தைய பிரதமரான பி.வி.-நர-சிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணு-வம் இலங்கைக்குச் சென்று இலங்கை அர-சோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போரா-டும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபா-கரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.


ஜெயலலிதா இலங்கை தமிழர்களின் கோரிக்-கையான தமிழ் ஈழம் அமைவதை ஏற்காதது மட்டுமல்லாமல், அப்-பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்-படுவதை கண்டித்து அறிக்கை விடாத ஜெயல-லிதா, இன்று விடுதலை போராளிகளுக்காக, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டி-ருப்-ப-வரைப்போல தன்னை காட்டிக்-கொள்ள முன்-வந்தி-ருப்பது வேடிக்கை-யாக இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கும் போரா-ளிகளுக்கும் எதிராக கருத்-துக்களை சொன்னதோடு, இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த-தோடு, ஈழப்போ-ராளி இயக்கத்தினரை தீவிர-வாத இயக்கத்தை சேர்ந்-தவர்களாக கருதி, இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஜெய-லலிதா, இன்று கண்ணீர் சிந்துகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment