ராமநாராயணன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரது அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், முரளிதரன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காஜாமைதீனும் போட்டியிட்டனர். இதே அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிட்டார்.
கே.ஆர்.ஜி. தலைவராக போட்டியிட்ட அணியில் ராம கோட்டை குமார் துணை தலைவர் பதவிக்கும், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.எல். தேனப்பன் ஆகியோர் செயலாளர்கள் பதவிக்கும், பாபுகணேஷ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 40 பேர் போட்டியிட்டனர்.
மாலை 4.30 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவுகள் எண்ணப்பட்டன.
தேர்தலில் ராமநாராயணன் அணி வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமநாராயணன் 441 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.ஆர்.ஜி.க்கு 147 ஓட்டுகள் கிடைத்தன. ராமநாராயணன் அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட சிவசக்தி பாண்டியன், சிவசக்தி பாண்டியன் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட காஜாமைதீன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
11.07.2010 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக வெற்றிபெற்ற இராமநாராயணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், அன்பாலயா பிரபாகரன் மற்றும் கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.காஜாமைதீன் ஆகியோரும் வாழ்த்து பெற்றனர். உடன் இயக்குநர் அமிர்தம் மற்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
No comments:
Post a Comment