கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

கூண்டோடு விலகும் தொண்டர்கள் பயத்தில் ஜெயலலிதா துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்-ளிட்ட பல்வேறு கட்சி-களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் அதிமுக முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு தலைமையில் திமுகவில் இணையும் விழா மன்-னார்குடியில் நடந்தது.

அதில் ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகம் முழுவதும் அதிமுகவில் உண்மை-யாக உழைக்கும் செயல்-வீரர்கள் பட்டியலை பார்க்கும்போது முதல் இடத்தில் யார் பெயர் உள்ளது என்றால், அழகு திருநாவுக்கரசு பெயர்-தான் இருந்தது. அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

வருவாரா, வர மாட்-டாரா என்று பெரு-மூச்-சோடு இருந்தோம். ஆனால் லேட்டாக வந்திருக்கிறார். லேட்-டாக வந்தாலும் லேட்-டஸ்ட்டாக வருவேன் என்று ரஜினிகாந்த் படத்-தில் ஒரு வசனம் உண்டு. அதேபோல அழகு திரு-நாவுக்கரசு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்-டாக வந்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்த-வரை இன்று மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவிற்கு வருவோர் எண்ணிக்கை நாளொருமேனியும், பொழு-தொரு வண்ணம் என்று சொல்கின்ற வகை-யில் நாளுக்கு நாள் அதி-கரித்துக்கொண்டே வரு-கிறது. அதிமுகவில் இருந்து சாரைசாரையாக அந்த இயக்கத்தை வழிநடத்-திய-வர்கள் மட்டுமின்றி அமைச்சராக இருந்தவர்-கள், எம்.எல்.ஏ.வாக இருந்-தவர்கள் மட்டுமின்றி உங்களை போன்று கட்-சிக்கு உழைத்த செயல்-வீரர்கள் எல்லாம் தினந்-தோறும் திமுகவில் இணை-வதை பார்த்துக்-கொண்-டிருக்கிறேன்.

திமுகவில் ஆயிரக்-கணக்-கானோர் சேர்ந்து கொண்டிருக்க காரணம், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக சரியாக செயல்-படவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத தலைவியாக ஜெயலலிதா இருக்கிறார்.

திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் நான்-காம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை-நகரங்களில் தலைவர், தலைமையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஆட்சி நடத்துபவர்கள், ஆட்சி பொறுப்பில் உள்-ளவர்கள் ஏன் ஆர்ப்-பாட்-டம் நடத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள்.

பொய் பேசுவதற்கும் ஓரளவு இருக்கிறது. தேர்-தல் நெருங்கும் காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஆயிரக்-கணக்கானோர் சேருகின்-றனர் என்ற பயத்தாலும், தேர்தல் நெருங்குவ-தா-லும், கட்சியிலிருந்து பல்-வேறு தலைவர்களும், தொண்டர்களும் கூண்-டோடு விலகுவதையும் கண்டு பயந்து போன ஜெயலலிதா, மிச்சமுள்-ள-வர்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை சொல்லி அறிக்கைகளை விட்டு கொள்கை, குறிக்-கோள் இல்லாத போராட்-டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

எதிர்க்கட்சியானது ஆளும் கட்சி நிறை-வேற்றும் திட்டங்களில் குறைகள் இருந்தாலோ, முறைகேடுகள் இருந்-தாலோ ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா ஆதா-ரத்தோடு சொல்லும் தகுதியை பெற்றிருக்-கிறாரா?. நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்-கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்-கிறார். அதனால் திமுக இளைஞரணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றார் ஸ்டாலின்.

No comments:

Post a Comment