கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

திருவாரூர்: மருத்துவகல்லூரி திறந்துவைத்தார் கலைஞர்


முதலமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு திருவாரூர் வந்தார். திருவாரூர் ரயில் நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் கருணாநிதி அங்கிருந்து கார் மூலம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் திருவாரூருக்கு அருகே உள்ள தாட்டூர் கிராமத்தில் அமைந்திருக்கும் தனது தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு சென்றார்.

சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கினார். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு புறப்பட்டார்.


அவர் 10 மணிக்கு 100கோடியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு வந்தார்.

துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி, வை.சிவபுண்ணியம், அமைச்சர் பொன்முடி போன்றோர் இந்த விழாவில் பங்கேற்றனர்


விழாவில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,


திருவாரூர் மக்களுக்கு எத்தனையோ வசதிகளை செய்து கொடுத்த தி.மு.க. அரசு தற்போது மருத்துவ கல்லூரியையும் வழங்கி உள்ளது. அது மட்டுமின்றி ரூ. 447.1.0 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன.

முதல் அமைச்சர் சிறுவயதில் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியில் சேர மறுத்தது. என்னை பள்ளியில் சேர்க்காவிட்டால் பள்ளி எதிரே உள்ள கமலாலய குளத்தில் குதித்து தற்கொலை செய்வேன் என்று கூறினார். உடனே அந்த நிர்வாகம் அவரை பள்ளியில் சேர்த்தது.


பள்ளியில் சேருவதற்காக எந்த அளவுக்கு முதல்வர் கலைஞர் போராடினாரோ அதே அளவுக்கு திருவாரூர் மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க போராடி வருகிறார்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதிமொழி அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் நிறை வேற்றி வருகிறோம். அந்த வகையில் ஒரு உன்னதமான திட்டம் தான் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் 6 ஆண்டுகளில் 21 லட்சம் குடிசைவீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மட்டும் 3 லட்சம் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. மீதம் உள்ள 5 ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை பெறும். இப்படி நான் கூறும்போது உங்களுக்குஒரு கேள்வி எழலாம். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். என்று கேட்க கூடும்.

அடுத்த தேர்தலிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும் 6 வது முறையாக தலைவர் கலைஞர் முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்பார் அப்போது தமிழ் நாட்டில் குடிசை வீடுகளே இல்லாத நிலை உருவாகி அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறும் என்ற உறுதியை அளிக்கிறேன் என்றார்.






No comments:

Post a Comment