தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டில் தி.மு.க., சார்பில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை துவங்கிவைத்து மத்திய அமைச்சர் அழகிரி பேசியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தொகுதிக்கு ஒருமுறை கூட வந்ததில்லை. வந்தாலும் ஹெலிகாப்டரில் பறந்து சுற்றி விட்டு சென்று விடுகிறார்.தொகுதியை அவர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.தி.மு.க., வெற்றி பெறாத போதும், ஆண்டிபட்டி தொகுதியில் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளோம். இப்போதும் பலர் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். ரோடு, பஸ், குடிநீர் வசதி கேட்டுள்ளனர். இதையெல்லாம் பத்து நாளில் செய்து முடித்து விடுவேன்.நான், விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தலாம் என முதல்வரிடம் கேட்டேன். அதற்கு அவர், "இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களை செய்து விட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம்' என்றார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளையும், தென் மண்டலத்தில் 59 தொகுதிகளையும் தி.மு.க., கைப்பற்றும் என உறுதி கூறினேன் இவ்வாறு அழகிரி பேசினார்.முகாமில், திரளான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தமிழரசி, டில்லி பிரதிநிதி செல்வேந்திரன், உட்பட பலர் பங்கேற்றனர்.
தூள் தலைவா
ReplyDelete