கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 10, 2010

அரசியல் அனாதைகள் : துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி கலைஞர் அறி-வாலயத்தில் நேற்று (9.7.2010) மாலை பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலா-ளரும் தமிழ்நாடு போக்கு-வரத்து துறை அமைச்ச-ருமான கே.என்.நேரு வரவேற்று பேசினார்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசிய-தாவது:-

கழகத்தை நம்பி, கலைஞரின் தலைமையை ஏற்று பணியாற்ற உரிமை எடுத்துக்கொண்டு வந்-துள்ள உங்களை வாழ்த்-துவதோடு உங்களுக்கு பணிவோடு தெரிவித்துக்-கொள்ள விரும்புவது, தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு, பாரம்பரியம் உண்டு. தி.மு.க நேற்று தொடங்கி இன்று உரு-வான இயக்கம் அல்ல. இன்று எத்தனையோ கட்சிகள் திடீர் திடீர் என உருவாகின்றன.

அப்படி உருவான கட்சிகளின் தலைவர்கள், நான் தான் அடுத்த முதல-மைச்சர் என்று சொன்ன-வர்களை நாடு நன்றாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி கூறியவர்கள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போய், அனா-தைகளாக, அப்பாவி-களாக போன காட்சி-களையும் மக்கள் பார்த்துக்-கொண்டுதான் இருக்கி-றார்கள்.

1949ஆ-ம் ஆண்டு கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வை அண்ணா தொடங்கிய போது ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சியை தொடங்கியதாக கூறவில்லை. இது ஏழை, எளிய மக்கள், தொழி-லாளர்கள், தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்-திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தான் அண்ணா சொன்னார். அதனால் தான் 1949இல் தொடங்கப்பட்ட தி.மு.க தேர்தல் களத்தில் உடனே இறங்கி விடவில்லை.

1956ஆ-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தி.மு.க தேர்தல் களத்தில் இறங்க-லாமா? என கழக தோழர்-கள் மற்றும் பொது-மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வாக்குப்பெட்-டிகள் வைக்கப்பட்டன. அதில் பெரும்பான்மை-யான மக்கள் தி.மு.க. தேர்தலில் போட்டியிட-லாம் என கருத்து தெரி-வித்து வாக்குப்பெட்டியில் காகிதத்தில் எழுதி போட்--டார்கள்.

அதன் அடிப்படையில் 1957இ-ல் நடைபெற்ற தேர்தலில்தான் முதல் முதலாக தி.மு.க. போட்டி-யிட்டு 15 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த 15 பேரில் ஒருவராக அன்று திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் இருந்து முதல் முறையாக சென்றவர்தான் தலைவர் கலைஞர். எனவே தலை-வர் கலைஞரை சட்ட-மன்றத்திற்கு முதல் முறையாக அனுப்பிய மாவட்டம் என்ற பெரு-மையும் திருச்சிக்கு உண்டு.

அதனை தொடர்ந்து 1962இ-ல் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள். 1967இ-ல் நடந்த தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்-களில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழ்-நாட்டில் ஆட்சி அமைத்-தது. அண்ணா முதலமைச்-சராக பதவி ஏற்றார். அண்ணா மறைவிற்கு பின்னர் 1971-இல் கலை-ஞர் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று பணியாற்ற தொடங்-கினார். அதன்பின்னர் நடந்த பல தேர்தல்களில் தி.மு.க வெற்றி வாய்ப்-பினை இழந்திருந்தாலும் அதனை கண்டு துவண்டு விடாமல் நாட்டு மக்க-ளுக்காக உழைத்துக்-கொண்டு இருப்பதுதான் தி.மு.கழகம். வெற்றி கண்ட போது வெறி கொண்ட தும் கிடை-யாது. தோல்வி வந்த-போது துவண்டு-போன-தும் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் சரிசமமாக கருதுவதுதான் தி.மு.கழகம்.

நம்மை போல் வெற்றி பெற்றதும், தோல்வி கண்-டதும் நாட்டில் தி.மு.க ஒன்றுதான் என்று பெரு-மையாக சொல்லிக்கொள்-ளும் அளவிற்கு உள்ள இந்த இயக்கத்திற்கு வந்-துள்ள உங்கள் அனை-வரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கலைஞர் ஆட்சி 4 ஆண்டுகள் நிறைவ-டைந்து அய்ந்தாம் ஆண்-டில் அடி எடுத்து வைத்து இருப்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ளவர்களும் வியப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க-வேண்டும் என கேட்டுக்-கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா-லின் பேசினார்.

அ.தி.மு.க முன்னாள் மாவட்ட அவைத்தலை-வர் முத்து உடையார், முன்னாள் தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் வையாபுரி உள்பட கட்சி-யில் இணைந்த 4 ஆயிரத்-திற்கும் மேற்பட்டோருக்-கும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துண்டு அணிவித்தார்.

No comments:

Post a Comment