இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக இளைஞரணி சார்பில் வாய்தா ராணி ஜெயலலிதாவை கண்டித்து, நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள புலம்பல் அறிக்கையை கண்டனத்துக்குரியது.
ஜெயலலிதா ஆட்சியில் நீதிபதிகளையும், அவர்களது உறவினர்களையும் எந்த அளவுக்கு பழி வாங்கினார் என்பதை தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த ஊழல்கள், வருமானத்துக்கு அதிகமாக குவிந்த சொத்துக்கள், டான்சி ஊழல், கொடைக்கானல் ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு. அன்னிய செலாவணி மோசடி வழக்கு. வருமான வரி வழக்கு. ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசிய வழக்கு. நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு போன்ற கணக்கிட முடியாத அளவிற்கு சட்டத்துக்கு புறம்பானவைகளை செய்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா சட்டத்தை பற்றியும், ஊழலை பற்றியும், நீதிமன்ற அவமதிப்பினை பற்றியும் அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும்.
ஜெயலலிதாவின் அறிக்கையை சாட்சியமாக வைத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக சட்டத்துறை தயங்காது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment