இந்திய ரூபாய் நோட்டுக்கு குறியீடு உருவாக்கும் போட்டியில் சென்னையை சேர்ந்த உதயகுமார் என்ற பட்டதாரி கலந்து கொண்டார்.
கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் உதவி பேராசியராக பணி புரிந்து வரும் அவர் குறியீட்டை மத்திய அரசு தேர்ந்து எடுத்து அறிவித்தது. வெற்றி பெற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இச்சந்திப்பிற்கு பின்னர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’நான் உருவாக்கிய குறியீடு இந்திய ரூபாய்க்கான குறியீடாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
இது சம்பந்தமாக முதலமைச்சர் கருணாநிதியை என்னுடைய குடும்பத்தாரோடு சந்தித்து அவருடைய வாழ்த்தை பெற்றேன். இது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது ஒரு பொன்னாள்.
முதலமைச்சர் வாழ்த்தை பெற்றதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்த குறியீடு குறித்த ஒரு புத்தகம் ஒன்றை வழங்கி உள்ளேன்.
அடுத்து என்னுடைய ஆசிரியர் பணியில் முழு நேரமாக ஈடுபடப்போகிறேன்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment