30.7.2010 அன்று இண்டியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் பி.ச். ரெட்டி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:
உயர்ந்த பிறப்பு வீதம், மற்றும் உயர்ந்த இறப்பு வீதம் என்பதில் இருந்து, குறைந்த பிறப்பு வீதம் மற்றும் குறைந்த இறப்பு வீதம் எனும் நிலைக்குச் செல்வது மக்கள் தொகை யில் ஏற்படும் மாற்றமாகும். (டெமோ கிராஃபிக் டிரான்சிஷன்). ஓராண்டில் 1000 பேருக்குக் குறைந்த பட்சம் 21 பிறப்பாகவும், 9 இறப்பாகவும் குறை யும் பொழுது மக்கள் தொகையில் மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறலாம் என அத்துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்ட அனுபவத்தைக் கொண்டு, மக்கள் தொகை மாற்ற ஆய்வாளர் கள், 1940களில் மக்கள் தொகை மாற்றக்கோட்பாடு என்பதை முன் வைத்தனர். அக் கோட்பாட்டின்படி, தொழில் மயமாதல், நகர மயமாதல், உயர்ந்த தலைநபர் ஊதியம், உயர்ந்த படிப்பறிவு வீதம், குறிப்பாகப் பெண் களிடையே உயர்ந்த படிப்பறிவு வீதம், அதிக நாள் வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு ஆகிய சமூகப் பொரு ளாதார வளர்ச்சிகள் மக்கள் தொகை மாற்றத்தை உண்டாக்குகின்றன. மக்கள் தொகை மாற்றத்திற்கான பாதை இது ஒன்றே எனக் கருதப்பட் டது. அந்த மாற்றம் மேற்கு நாடுகளில் நிகழ்ந்தபொழுது, உலகத்தில் எங் குமே அலுவலக முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இல்லை. பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பொழுது, சமுதாயப் பொருளா தார வளர்ச்சி நடைபெறா நிலையில், மக்கள் தொகை மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவை வெற்றி பெறுமா என மேல்நாட்டு வல்லுநர் கள் அய்யப்பட்டனர். தென்னிந்திய அனுபவம் மக்கள் தொகை மாற்றத்தை உண் டாக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் உண்டு என்பதைத் தென் இந்திய மாநிலம் ஒன்றின் அனுபவம் காட்டியது. 1970களில் மக்கள் தொகை மாற்றத்தைச் சாதித்த முதல் மாநிலம் கேரளம். ஆனால் கேரளம், தொழில் மயம், மற்றும் நகர மயம் அடைந்திருக்கவில்லை. அதன் தலை நபர் ஊதியமும் குறைவு. ஆனால் பெண்கள் உள்ளிட்ட அம்மாநில மக்களின் படிப்பறிவு வீதம் மிக அதிகம். அதைப் போலவே வாழ்நாள் எதிர்பார்ப்பும் அதிகம்; அதாவது உடல் நலமும் சிறப்பாக இருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு, (பொருளாதார வளர்ச்சியில்லாவிடி னும்) சமூக வளர்ச்சியின் மூலம் மக்கள் தொகை மாற்றத்தை அடைய முடியும் என அறியப்பட்டது. கேரளாவின் சமூக வளர்ச்சிப் பாதையைப் பற்றி உலகம் முழுதும் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது, 1990களின் தொடக்கத்தில், மக்கள் தொகை மாற்றங்காண மற் றொரு பாதை உண்டு என்பதைத் தமிழ்நாடு காட்டியது. ஆனால் தமிழ் நாட்டில் சமூக வளர்ச்சிக்கு அடை யாளமான படிப்பறிவு வீதமோ, வாழ்நாள் எதிர்பார்ப்போ கேரளா வைப் போல் அவ்வளவு உயர்ந்த வீதத்தில் இல்லை. அதன் தொழில் வளர்ச்சியும் (அந்தக் காலகட்டத்தில்) உயர்ந்த வீதத்தில் இல்லை. காரணம் பெரியார் தமிழ்நாட்டில் மக்கள் தொகை மாற்றம் ஏற்படக் காரணம், ஒரு பெரிய சமூக சீர்திருத்தக்காரரான பெரியார் ராமசாமி உண்டாக்கிய வலுவான சமூக இயக்கத்தின் தாக்கம் ஆகும். கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்திப் பெண்கள் அடுத்தடுத் துக் கருத்தரிப்பதைத் தடுத்து, அவர் களின் சுதந்திரத்தை மேம்படுத்த வற்புறுத்தினார்; பெண்கள் 22 வயதுக் குள் திருமணம் செய்யாமல் பார்த்துக் கொண்டால், மூன்று நான்கு பிள் ளைப் பேறுகளைத் தவிர்க்கலாம் எனவும் விளக்கினார். இந்திய அரசு நினைத்துப் பார்க்காத காலத்தி லேயே, இவ் வகையில், குடும்பக் கட்டுப்பாடு, மற்றும் திருமண வயது அதிகரிப்பு ஆகியவற்றைப் பெரியார் ஆதரித்தார். பெரியார் சீடர்களின் ஆட்சி! இப்பொழுது கூட, இந்தியாவில் பெண்கள் திருமண வயது 18 ஆண்டு கள். பெரியாருடைய சீடர்கள் சிலர் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதல மைச்சர்கள் ஆனார்கள். ஆகையால், திருமண வயது உயர்ந்ததாலும், குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட்டதாலும், தமிழ்நாட்டில் மக்கள் தொகை மாற்றம் நிகழ்ந்தது. கேரள முறையை விடத் தமிழ் நாட்டு முறையைப் பின்பற்றி, மக்கள் தொகை மாற்றத்தைக் காண்பது எளிதாக இருக்குமே என விவாதம் நடை பெற்ற பொழுது, 1990களின் பிற்பகுதியில் ஆந்திரப் பிரதேசம், மற்றொரு வியப்பை நிகழ்த்தியது. அரசியல் தலைவர்களும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட நிருவாகி களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, மக்கள் தொகை மாற்றத் தைக் கொண்டு வந்தனர். உடல்நலம் பேணுதல், மற்றும் அளவான குடும் பம் என்ற அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். ஆக, ஆந்திரப் பிரதேசம் மற்றொரு பாதையைக் காட்டியது. 2001 இல் ஒட்டு மொத்தம்படிப்பறிவு கருநாடகத்தில் 67 விழுக் காடாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 61 ஆகவும் இருந்தது. பெண்களின் படிப் பறிவு கருநாடகத்தில் 57.5 விழுக்காடாக வும், ஆந்திரப் பிரதேசத்தில் 51.2 விழுக் காடாகவும் இருந்தது. நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வீதம் கருநாடகத்தில் 34 விழுக்காடாகவும், ஆந்திரப் பிர தேசத்தில் 27 ஆகவும் இருந்தது. கரு நாடகத்தில் ஆண்களின் வாழ்நாள் எதிர் பார்ப்பு 61.7 ஆண்டுகள், பெண்களுக்கு 65.4 ஆண்டுகள். ஆந்திரப் பிரதேசத்தில் அந்த எண்களின் மதிப்பு 61.5 ஆண்டு களாகவும், 63.5 ஆண்டுகளாகவும் இருந் தது. 2006 இல், பெண்களின் சராசரித் திருமண வயது கருநாடகத்தில் 19.6 ஆண்டுகள்; ஆந்திரப் பிரதேசத்தில் 18.1 ஆண்டுகள். 200102 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) கருநாடகத்தில் 27.1 விழுக்காடு, ஆந்திரப் பிரதேசத்தில் 24.8 விழுக்காடு. தலைநபர் வருமான அதி கரிப்புக் கருநாடகத்தில் 200506 இல் 7.8 விழுக்காடு, ஆந்திராவில் 4.5 விழுக்காடு. இவ்வாறு, கருநாடக மாநிலத்தில், மக்கள் தொகை மாற்றம் நிகழ்வதற்கான எல்லா சமூகப் பொருளாதாரக் கூறு களும் சாதகமாக இருந்தன. இருப்பி னும், ஆந்திரப் பிரதேசத்தில் அது நிகழ்ந்து சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து, 2007 ஆம் ஆண்டில்தான் கருநாடகத்தில் மக்கள் தொகை மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அம் மாநிலத்தில் வாயளவில் போற்றினார் களேயன்றிச் செயலில் உறுதி காட்ட வில்லை. அரசியல்வாதிகள் மத்தியிலும் அதற்கான ஈடுபாடு குறைவு. வலிமை யான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட நடைமுறை இல்லாத நிலையில், சமூகப் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், மக்கள் தொகை மாற்றம் ஏற்படக் காலம் ஆகும் என்பதைக் கருநாடக அனுபவம் காட்டுகிறது.
No comments:
Post a Comment