கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 24, 2010

அண்ணா சமாதி:பழைய நினைவுகளில் கலைஞர்


முதலமைச்சர் கருணாநிதி தினமும் காலை அல்லது மாலையில் புதிய சட்டமன்ற வளாகத்துக்குசென்று பார்வையிட்டு அங்கு உட்கார்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தி வருகிறார். இதை அவர் வழக்கமான பணியாக கொண்டுள்ளார்.

அதேபோல முதலமைச்சர் கருணாநிதி நேற்று மாலை புதிய சட்டமன்ற வளாகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீர் என்று அண்ணா சமாதிக்கு செல்லும்படி கார் டிரைவரிடம் தெரிவித்தார்.

உடனடியாக கார் அண்ணாசமாதிக்கு சென்றது. அங்கு சென்றதும் கருணாநிதி, அண்ணா சமாதி முழுவதையும் வெகுநேரம் சுற்றிப்பார்த்தார்.

அங்கு அவர் இரவு 7-50 முதல் 8-50 மணிவரை ஒரு மணிநேரம் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அவர் அண்ணாவுடன் பழகிய பல சம்பவங்களை நினைத்து மனம் நெகிழ்ந்தார். அருகே இருந்தவர்களிடம் அண்ணாவின் பெருமைகளையும் அண்ணாவும் அவரும் கலந்து கொண்ட பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment