கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 10, 2010

சிங்கள அட்டூழியத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்


இலங்கை கடற் படை யினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படு வதைக் கண்டித்து, தி.மு.க மீனவர் அணி சார்பில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கொடி, பேனர்களுடன் கலந்து கொண்டனர். இலங்கை அரசு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். தி.மு.க மீனவர் அணி செயலர் பெர்னார்டு தலைமை வகித்தார். துணை செயலர் இரா.மதிவாணன், ராஜகோபால், கே.பி.சங்கர், விஜயபாலன், யூனுஸ், அடைக்கலம், சத்தியேந் திரன், க.தன சேகரன், தேவஜவகர், வி.எஸ்.ஜெ.சீனிவாசன், பொன்ன ரசு, ராமலிங்கம், நற்குணம், ஆர்த்தி, செல்வி, மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவ பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்களை காப்பாற்று, இலங்கை மீது நடவடிக்கை எடு என்று அவர்கள் முழக்கமிட்டனர். கட்டுமரம், மீன் பிடிக்கும் வலைகளை சிலர் கொண்டு வந்திருந்த னர்.
முன்னதாக தி.மு.க மாவட்ட செயலர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித் தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பெர்னார்டு மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் இலங்கை தூதரகம் சென்று தூதரக அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

லங்கை தூதரக அதிகாரியிடம் அளிக்கப் பட்ட மனு விவரம் வரு மாறு:

7-7-2010 நண்பகல் 12 மணியளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறு காவல் சரகம், வெள்ளப்பள்ளம் கிராம மீனவர் பகுதி யைச் சேர்ந்த செல்லப் பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு 10 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படை யினர் தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளை யும் கடலிலே தூக்கி எறிந்தும், அந்தத் தாக்குத லில் செல்லப்பன் என்ற மீனவரைப் படுகொலை செய்தும், மற்ற மீனவர் களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தும் உள்ளார்கள். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள் ளது.

தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் அவர்கள், இந்திய நடு வண் அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியும், நேரில் பேசியதன் அடிப் படையில் மத்திய அரசு, இலங்கை அரசோடு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுநாள் வரையில் தமிழக மீனவர் களின் துயர நிலை தீர்ந்தபாடில்லை.

இலங்கை அரசின் கடற்படையினர் தமிழக அப்பாவி மீனவர்களை சித்ரவதை செய்தும் அவர்களை துன்புறுத்தி நிர்வாணப் படுத்தி படு கொலை செய்கிற கொடுஞ்செயலை வன்மை-யாகக் கண்டிக்கிறோம்.

மேலும் இலங்கை மீனவர்கள், இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும் போது எந்த வித துன்புறுத்தல் இல்லா-மல் மனிதாபி மானத் தோடு முறையான விசா ரணை நடத்தி விடுவிப்-பதைப் போல இந்திய அரசின் நடை முறை-களை இலங்கை அரசும் பின்பற்ற வேண்டும்.

அண்மையில் இலங்கை- அதிபர் ராஜ-பக்சேவை, புதுடில்லியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பி-னர்கள் நேரில் சந்தித்த போது தமிழக மீனவர்-களை துன்புறுத்தவோ, உயிரிழப்பு ஏற்படுத்தவோ மாட்டோம் என்று நம்பிக்கையான உறுதி வழங்கினார். ஆனால், அதற்கு மாறாக இலங்கை கடற்படையினர் வன்-செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை அண்மையில் நடைபெற்று, ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்தில் கூட, தமிழக மீனவர்க ளின் இந்நிலை விரி-வாகப் பேசப்பட்டு, தமிழக மீனவர்கள், கடல் எல் லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட அவர் களைத் தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப் படி அவர்கள் மீது நடவ-டிக்கை எடுப்பதைத் தவிர இது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடு படக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப் படும் இக் கொடுமையைக் களைய இலங்கை அரசு முன் வரவேண்டும். இலங்கை கடற் படையினர் செயலை தி.மு.க. மீனவ ரணி கடுமையாகக் கண்டிக்கிறது என்பதை யும், இலங்கை தூதரகம் வாயிலாக இலங்கை அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி இது போன்ற சம்ப-வங்கள் நடைபெறுவது விரும்பத் தக்கது அல்ல என்பதை யும், இதுவே கடைசி நிகழ்வாக இருக்க வேண் டும் என்றும் இந்த ஆர்ப் பாட்டத்தின் மூலமாக எச்சரிக்கின்றோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.

முன்னதாக பெர்னார்டு பேசும் போது தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. மீனவர் களை கடத்தி சென்று சித்ரவதை செய்வதை அனுமதிக்க முடியாது. சில தினங்களுக்கு முன் நாகப் பட்டினம் மீனவர் உயிர் பறிக்கப்பட்டது. இனியும் பொறுக்க முடியாது என்பதை மத்திய அரசு, இலங்கை அரசு கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே ஆர்ப்பாட்டம் நடத்து கிறோம். எனவே தமிழக மீனவர்கள் உணர்வுகளை மத்திய அரசு மதித்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment