கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

தமிழக அரசுக்கு இ.கம்யூ. கட்சி எம்எல்ஏ பாராட்டு


திருவாரூரில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம்,

உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தை தமிழக மக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்போலவே 108 ஆம்புலன்ஸ் எல்லா வகையிலும் பயன்படுகிறது.

எனவே கலைஞர் எல்லா வகையிலும் மக்களுக்காக சிந்தித்து செயல்படுகிறார். அவரின் சிந்தனையும் செயல்பாடும் ஏழை, எளிய மக்களை பற்றி இருக்கிற காரணத்தினாலே, அம்பேத்கார் சிந்தித்து என்ன சொன்னாரோ, பெரியார் என்ன சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்று எண்ணினாரோ, அண்ணா என்ன கருதினாரோ, ஜீவா பல கோரிக்கைகளை எப்படி எல்லாம் முன் வைத்தாரோ, இவையெல்லாம் கனவில் இருந்ததது. இன்று நனவாகி விட்டது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களால் அம்பேத்கார், பெரியார், அண்ணா, ஜீவா ஆகிய தலைவர்களின் கனவு நனவாகி விட்டது என்றார்.


No comments:

Post a Comment