தஞ்சாவூரில் நேற்று (27.7.2010) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
நாம் நடந்து வந்த பாதை கடுமையான புயல், வெள்ளம், சூறா வளி இவைகளையெல் லாம் தாண்டித் தான் இன்று செப்பனிடப்பட்ட பாதையிலே நடந்து கொண்டிருக்கின்றோம். இங்கே கட்டப்பட்டி ருக்கின்ற அண்ணா அறி வாலயம், என் பேரால் அமைந்துள்ள அறிவால யம் எதுவாக இருந்தா லும், இவைகளெல்லாம் உங்களுடைய எலும்பு களால் கட்டப்பட்டது, உங்க ளுடைய நரம்பு களால் கட்டப்பட்டது, உங்களுடைய இரத்தத் தைக் குழைத்து சேறாக்கி, கபால எலும்புகளை செங்கல்லாக ஆக்கி கட் டப்பட்ட மாளிகை தான் அண்ணா அறிவா லயம் ஆனாலும், ஆங் காங்கே உருவாகிற திரா விட முன்னேற்றக் கழகத் தின் மாளிகை யானா லும், அமைந்திருக்கின் றன.
எல்லோராலும் கடன் வாங்கப்படும் திராவிட என்கின்ற சொல்
இத்தகைய மாளிகை களை எழுப்புவதற்கு நாம் பட்ட சிரமங்கள் எத்தனை, இன்றைக்கு திராவிட என்கின்ற சொல் எல்லோராலும் கடன் வாங்கப்படுகின்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. யார் கட்சி ஆரம்பித்தாலும், ஒரு காலத்திலே திராவிட என்ற சொல்லையே வேப் பங்காய் போல் கருதிய வர்கள், எட்டிக்காய் போல் கருதியவர்கள் இன்றைக்கு தாங்கள் ஆரம்பிக்கின்ற கட்சிக்கு, திராவிட என்ற சொல் லைச் சேர்த்தால் தான், மார்க்கெட்டில் அது நிற்கும் என்ற அளவிற்கு திராவிட என்கின்ற சொல்லை சேர்க்கின்ற விந்தையை காணுகின் றோம். ஆனால் இவர்க ளெல்லாம் இந்தச் சொல்லை எதிர்த்தவர் கள், ஏற்றுக் கொள்ளாத வர்கள். தஞ்சை தரணி யில் அறிவார்ந்த பெரி யோர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும், தெளிவு படைத்த நண்பர் களுக்கும் மிக நன்றாக தெரியும். திராவிட என்ற சொல்லை விஷமாக கருதியவர்கள் உண்டு. ஆனால் அந்தச் சொல், இன்றைய தினம் புதிய புதிய கட்சியை ஆரம்பிக் கின்றவர்களுக்கு அமுத மாக மாறியிருக்கின்றது. அதைச் சொல்லாமல் கட்சியை ஆரம்பித்தால், இது சந்தையில் விலை போகாது என்ற உண் மையை புரிந்து கொண்டு, திராவிட என்ற சொல்லை பயன்படுத்தியே திரா விட முன்னேற்றக் கழ கத்தை வீழ்த்த எண்ணு கிறார்கள். நான் அவர் களுக்கு சொல்லுவேன்,
ஒரு மரத்தை வீழ்த்த அந்த மரத்தை வெட்டி, அதிலே கோடரி செய்வ தைப்போல, திராவிட இனத்தை வீழ்த்த, திரா விட என்ற சொல்லை பயன்படுத்துகிற கோடரி களை, நாங்கள் அடை யாளம் காட்டியே தீரு வோம். திராவிட முன் னேற்றக் கழகத்தை வீழ்த்த, இன்றைக்கு நடைபெறு கின்ற முயற்சிகளை நீங் கள் எல்லோரும் நன் றாக அறிவீர்கள். அதற் குப் பிறகும் தஞ்சாவூ ரில், மாயவரத்தில், கும்ப கோணத்தில், திருவாரூ ரில், எங்கெங்கு காணி னும் அங்கெல்லாம் பல் லாயிரக்கணக்கில், லட் சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள் என்றால்; உலகத் தமிழ் மாநாட் டிற்கு உலகத்திலே உள்ள தமிழர்களெல்லாம் வந்து வாழ்த்து மழை பொழிகிறார்கள் என் றால், தமிழ் ஆய்வாளர்க ளெல்லாம் வந்து கலந்து கொள்கிறார்கள் என் றால், அதற்கு என்ன காரணம்? திருவாரூரிலே இருந்து கருணாநிதி குடும்பத்தோடு திருட்டு ரயில் ஏறி வந்தான். அப்படி ஏறி வந்தவனை நான் அடையாளம் காட் டுகிறேன் என்று ஒரு அம்மையார் அடையா ளம் காட்டியிருக்கின் றார்கள். நான் அதற்காக கவலைப்படவில்லை, அதற்காக நம்முடைய பொன்முடி அவர்கள் ரொம்பவும் கவலைப் பட்டார். திருட்டு ரயில் ஏறி வந்தது எப்போது, எந்த காலத்தில், எந்த தேதியில் என்றெல்லாம் அந்த அம்மையார் சொல் லவில்லை. ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதைப் போல கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தான் குடும்பத்தோடு என்று சொல்லுகிறார்கள். நண்பர்களோடு இருந்தால்தான் என் பணிகள் வேகமாக நடக்கும் எனக்கு ரயிலே ஒழுங் காக ஏறத் தெரியாது. அதைப்போலவே பஸ்சிலே ஏறுவதற்குக் கூட ஒருவருடைய துணை வேண்டும். நான் அப்படி பழக்கப்பட்டவன், எந்த பயணமானாலும் இரண்டு பேர் நண்பர் கள் என் கூட இருந் தால் தான் அந்த பயணத்திற்கு நான் ஒத்துக் கொள் வேன். இப்பொழுதுகூட அப்படித்தான். இப் பொழுது என்னுடைய கால் பலவீனமாக இருக் கின்றது, அதற்காக அல்ல, என்னுடைய உடல் வலி வாக இருந்த அந்த காலத் திலேயே நாலு நண்பர் களோடுதான் நான் இருப் பேன். அப்படி இருந் தால்தான் என்னுடைய மனம் விசாலமாக இருக் கும், என்னுடைய மூளை சுறுசுறுப்பாக இருக்கும், என்னுடைய பணிகள் வேகமாக நடக்கும், அப் படியே பழக்கப்பட்ட வன். அறிஞர் அண்ணா அவர்கள் என்னை இதே மேடையில் உங்களுக்கு அறிமுகப்படுத்தி சொன் னார். நீங்கள் பலபேர் அன்றைக்கு இல்லை. இந்த மேடையில் ஒரு மாணவர் மாநாடு, தம்பி இராஜமாணிக்கம் என்ற தோழர் முன்னின்று நடத் திய மாநாடு. அந்த மாநாட்டிற்கு நான் சற்று தாமதமாக வந்தேன். திருச்சி வந்து அங்கி ருந்து இங்கே வந்தேன். வரும் பொழுது அண்ணா அவர் கள் பேசிக் கொண்டிருந் தார்கள். அன்றைக்கு கல்லக்குடி போராட்டம் போன்ற போராட் டங் கள் பல்வேறு சிறைச் சாலைகளில் அடைபட்ட நிகழ்ச்சிகள் இவைகளுக் கெல்லாம் பிறகு நான் தஞ்சை மேடையில் அன் றைக்கு தோன்றிய காரணத் தால் எதிரிலே அமர்ந் திருந்த உங்களைப் போன் றவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கையொலி செய்து என்னுடைய பெயரைச் சொல்லி வாழ்த் திக் கூறி அமர்ந்தார்கள். எப்படிப்பட்ட மேடை இது? அண்ணா திரும்பி பார்த்தார் வந்துவிட் டாயா, நீ தாமதமாக ஏன் வந்தாய்? என்று கேட்டார்கள். சொன் னேன் காரணத்தை. உடனே அண்ணா அவர்கள் மேடையில் இதுவரை யில் திராவிட முன் னேற் றக் கழகத்தினுடைய வரலாற்றின் ஒரு பகுதியை நான் எழுதி னேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுது வான் என்று சொல்லி விட்டு அமர்ந்தார்கள். அந்த மேடை தான் இந்த மேடை. இந்த மேடையை நான் தொட்டுக் கும்பிட விரும்புகிறேன். இங்குமாத்திரமல்ல மன்னார்குடியிலே நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலும் எனக்கு முன்பு அண்ணா பேசி விட்டு புதுக்கோட்டையோ, பட்டுக்கோட்டையோ போக வேண்டிய சூழ் நிலையில்; நான் திரா விட இயக்கத்தின் முற் பகுதியை பேசி விட்டுச் செல்கிறேன் - எனக்கு பிறகு தம்பி கருணாநிதி நான் எழுதிய திராவிட இயக்க வரலாற்றின் அடுத்த பகுதியை தொடருவான் என்று சொல்லிவிட்டு போனார்கள். அதைப் போல அவர்கள் விட்டு சென்ற அந்த பகுதியை - அந்தத் தொடரை நான் இப்பொழுது நிறைவு செய்து கொண்டிருக் கின்றேன், உங்களுடைய துணையோடு, உங்களு டைய ஒத்துழைப்போடு, நீங்கள் எனக்கு பக்க பல மாக இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் அதைச் செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் பொன்முடி போன்றவர்கள், தம்பி ஸ்டாலின் போன்ற வர் கள், மற்றவர்கள் யாரோ சொன்னார்கள் என்று கவலைப்பட வேண் டாம். திருட்டு ரயில் ஏறி வந்தார் என்று சொன் னார்கள் என்றால், நான் அவர்களுக்கு சொல்லு வேன். நான் ஒருமுறை ரயில் ஏறி போலீசாரால் தடுக்கப்பட்டது உண்மை. அது எப்போது தெரி யுமா? 13.9.1944 இல் என் னுடைய திருமணம் முடிந்து, என்னுடைய முதல் மனைவி சிதம்பரம் ஜெய ராமனுடைய தங்கை பத்மாவதி முதலிர வுக் காக சிதம்பரத்திலே காத் திருக்கிறார். நானும் என் னுடைய நண்பர் தென் னனும் திருவாரூரிலே இருந்து புறப்பட்டு அவர் தான் எனக்கு பாங்கன். பாங்கன் என்றால் மாப் பிள்ளை தோழன், அவரை அழைத்துக் கொண்டு முதலிரவு நிகழ்ச்சிக்காக சிதம்பரம் சென்று கொண்டிருக்கின்றேன். அப்போது இரயிலிலே போனேன். ரயிலிலே போனபோது இந்த அம்மையார் சொல்வ தைப் போல எந்த நிகழ்ச் சியும் நடைபெறவில்லை. ஆனால் என்ன நடந் தது என்றால் சிதம்பரத் திலே போய் இறங்கிய தும் ஒரு அய்ந்து, ஆறு போலீசார் என்னை சுற்றி வளைத்துக் கொண்டு நீங் கள் ஊருக்குள்ளே போகக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன்? ஊரில் பிராமணர்கள் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் நீங்கள் ஏதாவது கலவரம் செய் யக்கூடும். ஆகவே உங் களை அனுமதிக்க முடி யாது. 144 தடையுத்தரவு எனக்கு மாத்திரம் என்றார் கள். காரணம் என்ன என்று கேட்டேன். அதற்கு பிறகு சொன்னார்கள். நான் எழுதிய முர சொலி துண்டறிக்கை - அதை எடுத்துக் காட்டி இப்படி எழுதி இருக் கிறீர்கள் நீங்கள் என்றார் கள். என்ன எழுதியிருந் தேன். தில்லையிலே! ஆம்! தீக்ஷதர் கோட் டையிலே, தீனதயாபரன் கான முழக்கத்துடன் காலைத் தூக்கி காளி யி டம் காலித்தனம் செய்த கைலைப் பதியிலே பூசுரக் கூட்டம் பூணூல் ஆட்சி நடத்தும் பூலோக கைலாசத்திலே புனிதர் மாநாடாம்! பூரி தட் சணையாம்! புண்ணியர் கூட்டமாம்! சாதியை வளர்க்கின்ற மாநாடாம், தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட் டவர்களை இழித்தும், பழித்தும் பேசுகின்ற மாநாடாம். அந்த மாநாடு நடக்கலாமா, தமிழர் களை இழிவுபடுத்து கின்ற மாநாட்டை அனுமதிக் கலாமா என்று கேட்டு வருணத்தின் கொடு மையை எடுத்து விளக்கி அந்த துண்டறிக்கை யிலே எழுதியிருந்தேன். ஆகவேதான் நீ உள்ளே நுழையக்கூடாது என் றார்கள். பக்கத்திலே உள்ள தென்னன் சொன்னார். அய்யா, அவருக்கு இன் றைக்கு முதல் இரவு. நீ ஊருக்குள்ளே நுழையக் கூடாது என்றால் என்ன செய்வது? என்று கேட் டார். அதெல்லாம் எங் களுக்கு கவலையில்லை திரும்ப ரயில் ஏறி போங் கள் என்று சொன்னார் கள். நான் தென்னனைப் பார்த்து இவர்களிடம் வம்பு வேண்டாம் வா ஊருக்கே போய் விட லாம் என்று இருவரும் ரயில் ஏறி திரும்ப திருவா ரூர் போனோம். திருவா ரூரிலே காலையிலே கேட் டார்கள் என்ன வந்து விட்டீர்கள், என்ன நடந் தது என்று கேட்டார் கள். நானும் நடந்ததைச் சொன்னேன் இவ்வளவு தான். இது திருட்டு ரயிலா? தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண் டும். சில பேர் வாய் துடுக்குள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். நான் அதற்கு பதிலுக்கு, பதில் பேச விரும்பாதவன். இவர் பேசினார். ஒரு நடிக ரைப் பார்த்து சட்ட சபைக்கு வரும்போ தெல்லாம் தள்ளாடிக் கொண்டு வருகிறார். குடித்து விட்டு வருகிறார் என்று சொல்ல, அந்த நடிகர் உடனடியாக இவ ரைத் திரும்பிப் பார்த்து ஆமாம் இவர்தான் ஊற் றிக்கொடுத்தார் என்று சொன்னாரே, அது போல நான் சொல்ல மாட் டேன். ஏனென்றால் அப்படிப் பட்ட பள்ளிக்கூடத்தில் நான் படிக்கவில்லை, அண்ணாவின் பள்ளிக் கூடம் அரசியல் நாகரி கத்தின் தொட்டில். அப் படியெல்லாம் நான் படிக்க விரும்பவும் இல்லை, படித்து பயிற்சி பெற்றதும் இல்லை. ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியில் கட்சி கள் நடத்துவதற்கு அர சியல் பேசி அந்த அரசி யலுக்கு மக்களை தயார் படுத்தி அவர்களுடைய ஆதரவைப் பெற்று திட் டங்களைத் தீட்டுவது தான் உண்மையான - வடமொழியிலே சொல் வார்களே ஷேமநல ஆட்சி என்று மக்கள் நல அரசு. அந்த மக்கள் நல அரசு நடத்தத்தான் நாம் விரும்புகின்றோம். அரசியல் நாகரிகத்தின் தொட்டில்! அதை இழித்தும் பழித் தும் பேசுகின்றவர்கள் நிச்சயமாக மக்களிடத் திலே எடுபடக்கூடியவர் கள் அல்ல, வெகுவிரை வில் செல்லாக் காசு களாக ஆகி விடுவார் கள். ஆகவே, கவலைப் பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்
No comments:
Post a Comment