கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 3, 2010

உலகத் தமிழர்களுக்கு தலைவர் கலைஞர்: மலேசிய இ.ஐ.கட்சி தலைவர் டத்தோ நல்லா


தமிழக முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு இன்று 87 வது பிறந்த நாள். பிறந்த நாள் காணும் கருணாநிதிக்கு மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே.எஸ். நல்லா பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

87 வது பிறந்த நாளை கொண்டாடும் உலக தமிழினத்தலைவர், தமிழுக்கு தலைவர் அருமை நண்பர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மலேசியாவில் வாழும் இந்தியர்கள் சார்பிலும், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் சார்பிலும் எனது சார்பிலும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆயிரம் பிறை கண்ட அற்புத நண்பரே உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தலைவராக விளங்கும் நீங்கள், தமிழ்ச்சமுதாயத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்வதை நான் எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன் என்று டத்தோ கே.எஸ்.நல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment