![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio6uXKaKt8yaSMVO4umDnWZbT9xCOT68PohW0BLLKBjI6YZOXyT6PjnBmXzQuy_nBmVlvny_r1GnbACgPza3MMLd6StnJbsY6oViJ5DNBLHa2svkvvYhVPVR2keRA3D9h2mGFUxn5JEdjT/s400/UTSM+Stamp+1.jpg)
உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு நினை-வாக சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய அமைச்சர்ஆ.இராசா வெளியிட முதலமைச்சர் கலைஞர் பெற்றுக்கொண்-டார். உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளி-யிட்டு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது, வரலாற்று சிறப்பு மிக்க இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பு அஞ்சல்தலை-களை வெளியிடும் வாய்ப்பு கிடைக்க பெற்றமைக்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன். அஞ்சல்தலையை வெளியிட்டு முதலமைச்-சரை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த விழா அல்ல. அந்த பாராட்டுகளை முதல-மைச்சரும் விரும்பக்கூடிய-வர் அல்ல. இந்தியாவில் அஞ்சல் துறை சார்பில் பல அஞ்சல்தலைகள் வெளி-யிடப்பட்டிருந்தாலும், செம்மொழி விழாவிற்காக எந்த அஞ்சல் தலையும் இந்திய அஞ்சல் துறை சார்பில் இதுவரை வெளி-யிடப்படவில்லை. முதன் முதலாக தமிழ்மொழி அந்த தகுதியை பெற்றுள்-ளது. தமிழுக்கு செம்-மொழி தகுதி அளித்தற்-காக இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்-கிறது. இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது ஏன் என்பது பற்றி இங்கு விளக்க கடமைபட்டுள்-ளேன். தலைவர் கலைஞர் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட மத்திய அமைச்சர் என்ற கடமை-யினால் அந்தக் காரணங்-களை பதிவு செய்ய விரும்புகிறேன். அமெரிக்காவில் கறுப்-பர் இன விடுதலைக்காக போராடி தனது 35 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்ற கறுப்பு மனிதர் மார்ட்டின் லூதர்கிங். அதே கறுப்பர் இனத்தில் பிறந்த ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு பேசிய பேச்சு பிரகடன-மாக இருந்தது. இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். முஸ்-லிம்கள் இருக்கிறார்கள். யூதர்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் இருக்கிறார்-கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கி-றார்கள். இவர்கள் எல்-லோரும் சேர்ந்து ஒரு தேசத்தை கட்டமைத்து இருக்கிறோம். அந்த தேசத்துக்கான பண்பாடுகளை உலகின் மூலை முடுக்குகளில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்ற வர-லாற்று சிறப்பு மிக்க பிரகடனத்தை ஒபாமா தெரிவித்தார். இதன் மூலம் ஒரு பெரிய புரட்சியை அமெரிக்கா செய்து விட்டதாக சொல்-கிறது. ஆனால் அதை-விட பெரிய புரட்சியை இந்த மாநாடு பறைசாற்-றுகிறது. அது எது என்றால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கலைஞர் கொடுத்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க வரியினால். உலகின் தலை-யாய மொழியாக தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் இரு கலாசாரங்கள் உள்ளன. அந்த இரண்டு கலாசாரங்-களுக்கும் இடையில் உரசல் இல்லை, ஊடல் இல்லை. சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு செம்மொழிகளும் இந்தி-யா-வின் தூண்கள் ஆகும். சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெற்றது. பல மொழிகள் இருப்பினும் தலையாய மொழியாக தமிழ் விளங்கி வருகின்-றது. இந்த மாநாட்டின் மய்ய கருத்தான பிறப்-பொக்கும் எல்லா உயிர்க்-கும் என்ற தத்துவத்தை கொடுத்த பெருமை திரா-விட இயக்கத்திற்கு உள்-ளது. அதை உலகம் முழு-வதும் இந்த மாநாட்டின் மூலம் கொண்டு சென்ற பெருமை தலைவர் கலை-ஞருக்கு உண்டு. தாழ்த்தப்-பட்ட சமுதாயத்தை புறக்-கணித்து வந்த இந்த நாட்டில் அதே தாழ்த்தப்-பட்ட இனத்தை சேர்ந்த என்னால் அஞ்சல்தலை வெளியிடப்படுவதற்கு கார-ணமாக இருந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசினார். |
No comments:
Post a Comment