கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 3, 2010

என் பேச்சை கன்னிப்பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;மழலை பேச்சாக எடுத்துக்கொள்ளுங்கள்- குஷ்பு பேச்சு


முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் வடக்கு மாட வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இன்று மாலை பொதுக்கூட்டம் துவங்கியது.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்,முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம் வழுதி, எஸ்.பி.சற்குண பாண்டியன், கவிஞர் கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு மற்றும் கழக முன்னணியினர் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், திமுகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு 8.15க்கு கலைஞருக்கு வாழ்த்துரை வழங்கினார்.


பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைத்து திமுக முக்கிய பிரமுகர்களையும் குஷ்பு வரவேற்று பேசினார்.


துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேசும் போது,
‘’தலைவரால் பலருக்கு பெருமை. ஆனால் தலைவருக்கே பெருமை சேர்க்கிறார்
துணைமுதல்வர்’’என்று குறிப்பிட்டார்.

மு.க.அழகிரியை வரவேற்றுப்பேசும் போது, ‘’சினிமாவில் ரஜினி பேரைச்சொன்னாலே அதிரும். அரசியலில் இவர் பேரைச்சொன்னாலே அதிரும். அவர்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி’’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு, ‘’என்னுடைய பேச்சை கன்னிப்பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மழலை பேச்சாக எடுத்துக்கொள்ளுங்கள்.

நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்று பலரும் கேட்கிறார்கள். திமுகவில் பெண்களூக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால்தான் திமுகவில் இணைந்தேன்.

மேலும், மூடநம்பிக்கைகளூக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது திமுக. மற்ற மாநிலங்களில் நடக்கும் மூடநம்பிக்கை கொடுமைகளை டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகள் குறைவு. அதற்கு காரணம்..திமுகவும், தலைவரும்தான்.

தலைவர் ஆட்சியில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். தலைவர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திருக்கிறது.

தனது திரைப்படங்களில் கூட தலைவர், பெண்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்துவருகிறார். மந்திரிகுமாரி, பராசக்தி, அரசிளங்குமரி என்று படைத்தார்.

தலைவர் மகன் மு.க.முத்து படம் எடுத்தபோது ராஜகுமாரன் என்று எப்படியெல்லாமோ படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால் அந்த படத்திற்கு கூட பூக்காரி என்று பெயர் வைத்தார்.

இப்போதும் கூட கண்ணம்மா, பெண்சிங்கம் என்று படைக்கிறார்.


சிங்கம், புலி என்று ஆண்களை மையப்படுத்தி இப்போது டைட்டில் வைக்கும் காலத்திலும் பெண் சிங்கம் என்று பெண்ணுக்கு
பெருமை சேர்க்கிறார் தலைவர். அதனால்தான் நான் திமுகவில் இணைந்தேன்.


நாம் சரித்திரத்தை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் தலைவர் சரித்திரத்தை படைத்துக்கொண்டிருக்கிறார். தலைவர்
நல்லா இருந்தால்தான் தமிழ்நாடு நல்லா இருக்கும். நீங்க நல்லா இருக்கனும் தலைவரே’’என்று தெரிவித்தார்.


’’எனக்கு பேச வாய்ப்பு தந்த தலைவருக்கு நன்றி. ஹெய்ஹிந்த்!’’ என்று தனது பேச்சை நிறைவு செய்தார் குஷ்பு.



No comments:

Post a Comment