டெல்லி மேல் சபை தேர்தல் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, செல்வகணபதி ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்தனர்.
காலை 11 மணிக்கு கோட்டைக்கு வந்த தி.மு.க. வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற செயலாளரும், டெல்லி மேல் சபை தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் மனுக்களை கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக திமுக வேட்பாளர்கள் மூன்று பேரும், திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment