கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 24, 2010

பாடுபட்ட கருணாநிதிக்கு வாழ்த்துகள்: பிரதீபா பட்டீல்


மாநாட்டு விழாவில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடக்க உரையாற்றினார்.

அப்போது அவர், ‘’தமிழ்மொழி பழம் பெருமை வாய்ந்தது கலாச்சாரம் வளம் கொண்டது ஆகும். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக அமைய பாடுபட்ட கருணாநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழ் மக்கள் முக்கிய அங்கம் பெற்றுள்ளனர். சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள் தமிழ் மொழிக்கு அடையாளம் ஆகும்.

திருவள்ளூவர் அளித்த திருக்குறள் தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பாகும். சிலப்பதிகாரம் மணிமேகலை தொல்காப்பியம் சிவகசீந்தாமணி, தமிழின் சிறப்பை விளக்கும் நூல்களாகும்’’ என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கூறினார்.


’’அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழ் கலாசாரம், வரலாறு குறித்த அறிவுடன் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


எல்லா மதங்களுக்கு இடையிலும் மரியாதை காட்டிய இனம் தமிழ் இனம். சமத்துவமற்ற நிலையை உருவாக்கும் அல்லது சகித்துக் கொள்ளாத உலகைத்தான் உருவாக்க வேண்டும்.


தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.


நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளது.

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் அவர் செயல்படுகின்றன. இதுபோன்ற நிலைதான் நாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.


உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் இருக்கிறது. மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் நிறைந்ததாக தமிழ் இருக்கிறது.


சங்க காலத்தில் பெண் புலவர்களும் இருந்து கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள் என்பது அந்த காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டது என்பதற்கு நிரூபணமாக உள்ளது.

நன்னெறியைப் போதித்த அற்புதமான ஆசிரியராக திருவள்ளுவர் இருக்கிறார்.


சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் கவிஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பாடல்கள்தான் நாட்டின் எல்லா நிலைகளுக்கும் சுதந்திர உணர்வைப் பரவச் செய்தன’’ என்று தெரிவித்தார்.No comments:

Post a Comment