கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, June 4, 2010

தந்தை பெரியார் வலியுறுத்திய கட்டுப்பாடே முக்கியம்! பிறந்த நாள் விழா ஏற்புரையில் முதலமைச்சர் கலைஞர்


சென்னை, ஜூன், 4_ கடமை, கண்ணியம், கட்டுப்-பாடு என்பதில் மிக முக்கியமானது கட்டுப்பாடே என்று தந்தை பெரியார் வலியுறுத்தியதை சுட்டிக்-காட்டி, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் ஏற்புரையில் கூறினார்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை _ திருவான்மியூரில், (3.6.2010) தி.மு.க. பொதுச்செயலாளரும், நிதியமைச்-சருமான இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவ்-விழாவின் ஏற்புரை-யில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்று-கையில் குறிப்பிட்டதாவது:

ஒருமுறை திருச்சியிலே நடைபெற்ற பொதுக்-கூட்டத்திலே, அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் பேசினார்கள். அப்போது சொன்னார், ``அண்ணாத்துரை சொன்னார் என்று கருணாநிதியும், அந்தக் கட்சியிலே உள்ளவர்களும் நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றையும் காப்பாற்ற வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார்கள். நான் கருணாநிதிக்கு மாத்திரம் அல்ல, கருணாநிதி தலைமையிலே இருக்கின்ற கட்சித் தொண்டர்களுக்கெல்லாம், கட்சித் தோழர்-களுக்கெல்லாம் சொல்வேன், நீங்கள் கடமையை மறந்தாலும் மறந்து விடுங்கள், கண்ணியத்தை நீங்கள் போற்றாமல் விட்டாலும் விட்டு விடுங்கள். ஆனால் கட்டுப்பாடு அதை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று நான் கட்சித் தோழர்களுக்கு - தி.மு.க. நண்பர்-களுக்கு சொல்வேன் என்று பெரியார் அழுத்தந்-திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

ஏனென்றால், கட்டுப்பாடு இருந்தால் எல்லோரும் சேர்ந்து கண்ணியம் தவறி கூட நடக்கலாம். இது பெரி-யாருடைய வியாக்கியானம். கடமை கூட தவறி-விடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் எவனும் எதுவும் செய்ய முடியாது. பெரியார் அவ்வளவு நிர்த்தாட்சண்யமாக, மூர்த்தன்யமாக சொன்ன அந்த வார்த்தையை இன்றளவும் கடைப்பிடிக்கின்ற காரணத்தினாலே தான் இதை யாரும் அசைக்க முடிய-வில்லை, ஆட்ட முடிய வில்லை, வானுயர ஓங்கியிருக்-கின்ற ஆல மரம் போல் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இருக்கின்றது.

ஒரு சிறு விதை தான் ஒரு ஆல மரத்திற்கு_- தெள்-ளிய ஆலின் ஒரு பழத்தொரு விதை தெண்ணீர் கயத்து சிறு மீன் சினையிலும் நுன்னிதே ஆயினும் அண்ணல் யானை அணி தேர் புரவி ஆட்பெரும் படை-யுடன் மன்னர்க்கிருக்க நிழலாகும்மே- ஆல-மரத்தினுடைய விதை குளத்திலே நீந்துகின்ற மீனு-டைய சினையை விட சிறியதாக இருந்தால் கூட தெண்ணீர் கயத்துள் இருக்கின்ற மீன்களுடைய சினையை விட சிறிதாக இருந்தாலும்கூட -அணி தேர் புரவி ஆட்பெரும் படையோடு தேர்களும், குதிரை--களும், யானைகளும், காலாட் படைகளும் கொண்ட பெரும் படைகளோடு மன்னர் இருப்பதற்கு நிழல் தரக் கூடிய மரமாக ஆல மரம் வளருகிறது என்றால், அதற்குக் காரணம் ஒரு சிறு விதைதான். ஆம். அந்த விதை தான் சுயமரியாதை, கட்டுப்பாடு_ - பெரியாரிசம் _அண்ணாயிசம் என்றெல்லாம் நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த விதை தான் இன்றைக்கு ஆல மரமாக தழைத்து திராவிட முன்னேற்றக் கழகமாக நிழல் பரப்பி, அதன் கிளைகளாக, வலுவாக மன்னனுக்கே அவன் சேனைக்கே நிழல் தரக் கூடிய செழிப்பு படைத்ததாக, உரம் படைத்தாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு விளங்குகிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

இந்த வலிவை நான் தேடினேனா? இல்லை. இந்த வலிவை நான் உருவாக்கினேனா? கிடையாது. இந்த வலிவுக்குக் காரணம் நானா? அல்ல. இந்த வலிவுக்கும் பொலிவுக்கும் காரணம் - நான் இவைகளையெல்லாம் உருவாக்கவில்லை. என்னை உருவாக்கிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் (கைதட்டல்) என்னை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள், ஆகவே நான் இந்த வலிவை உருவாக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றவனாக இருக்கிறேன். (கைதட்டல்) இந்த வாய்ப்பை - இந்த வலிவை - இந்தப் பொலிவை இன்றைக்கு நாம் பெற்றி-ருக்-கிறோம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்த மாதத்தோடு ஒழித்து விடலாம், அடுத்த மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்றெல்லாம் ஆரூடம் கணிப்போர்-களுக்கு_- பத்திரிகைகளின் பலத்தாலேயே, திண்ணைப் பிரச்சாரத் தினாலேயே ஒருவருக்கொருவர் மூட்டி விடுகின்ற கலகத்தாலேயே இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று யாராவது கருதுவார்களானால், அவர்களுக்கு நான் அளிக்கின்ற பதில், எத்தனையோ பேர் முயன்று பார்த்து முட்டி முட்டி தலையில் தான் ரத்தம் வழிகிறதே அல்லாமல், இந்தப் பாறையை எவரும் உடைக்க முடியவில்லை என்பது தான் நான் தருகின்ற பதிலாக இன்றைக்கு அமைந்திருக்கின்றது.

உங்களிலே சிலர் தான் நாங்கள் -இந்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே நாங்கள் எல்லாம் தலைவர்கள், நீங்கள் எல்லாம் தொண்-டர்கள் என்று பொருள் அல்ல. நீங்கள் இங்கே வருவ-தற்கு அதிக நேரம் ஆகாது. நிச்சயமாக உங்களால் வர முடியும். நீங்கள் வந்திருப்பதாகத் தான் நாங்கள் கருதிக் கொண்டு -ஒரு காலத்திலே வரக் கூடியவர்கள் தான் என்கின்ற அந்த எதிர்பார்ப்போடு தான் உங்களை அணுகுகிறோம். நாங்கள் உங்களை விடப் பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் வேண்டுமானால் முதியவன், பெரியவன் என்று நீங்கள் என்னை அழைக்கலாம். ஆனால் தமிழைக் காப்பதில், தன்மானத்தைக் காப்பதில், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பதில், என்னைப் போல ஓர் இளைஞன் இருக்க முடியாது. (பலத்த கைதட்டல்).

இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் ஏற்புரை-யாற்றினார்.


No comments:

Post a Comment