கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, June 21, 2010

நக்கீரனின் ’உயிருக்கு நேர்’: அகமகிழ்ந்த கலைஞர்




உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி, தமிழின் பெருமைகளை உரக்கச் சொல்லும் வகையில் உயிருக்கு நேர் என்ற சிறப்பு மலரினை நக்கீரன் நிறுவனம் தயாரித்துள்ளது.

செம்மொழி மாநாட்டுச் சிறப்புமலரின் முதல் படியினை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞரிடம் நக்கீரன் ஆசிரியர் 20-06-2010 ஞாயிறு காலையில் நேரில் வழங்கினார்.


கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது நக்கீரன் இணையாசிரியர் அ.காமராஜ், தலைமைத் துணையாசிரியர் கோவி.லெனின் இருவரும் உடனிருந்தனர்.

நக்கீரன் தயாரித்துள்ள சிறப்பு மலரின் உள்ளடகத்தையும் வடிவமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து அகமகிழ்ந்தார் முதல்வர்.

கோவையில்2010 சூன் 23முதல் 27வரை (திருவள்ளுவராண்டு 2041 ஆனி 9-13) நடைபெறும் உலகத்தமிழ்ச்செம்மொழிமாநாட்டுக்கான மக்கள்தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவில் நக்கீரன் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் தலைமையில் நடந்த இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் , மாநாட்டிற்காக நக்கீரன் சார்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறோம் என உறுதியளித்திருந்தார் ஆசிரியர் நக்கீரன் கோபால்.

அதனை நிறைவேற்றும் வகையில் உயிருக்குநேர் எனும் 232 பக்க சிறப்புமலர்

முற்றிலும் வண்ணப்பக்கங்களுடன் 130 ரூபாய் விலையில் வெளிவந்துள்ளது.


தமிழ் அறிஞர்களின் கைவண்ணத்தால் சிறந்துள்ள, உயிருக்குநேர் எனும் இந்த மலரில் பரிதிமாற்கலைஞர், கால்டுவெல், திரு.வி.க, தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட அந்நாளைய தமிழறிஞர்களின் கட்டுரைகளில் தொடங்கி, இன்றைய தமிழ்வல்லுநர்களின் கட்டுரைகள் வரை இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கியம் தொடங்கி பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்,
மு.மேத்தா, வைரமுத்து எனத் தொடரும் தமிழ்க்கவிதை பாரம்பரியத்தின் இன்றைய கவிஞர்கள் வரையிலான படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் என அனைத்துக்கூறுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில்படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.


செம்மொழித்தமிழின் தொன்மைச் சிறப்புகளையும் இன்று அது எதிர்கொள்ளும் சவால்களையும் நாளை பெறவேண்டிய வெற்றிகளையும் அலசி ஆராயும் வகையில் அமைந்துள்ள இம்மலர், செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியாகும்.


No comments:

Post a Comment