கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, June 28, 2010

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" சிறப்புக் கருத்தரங்கம் - கலைஞர் உரை


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3ஆம் நாள் நிகழ்ச்சியாக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

ஏறத்தாழ நான்கரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த கருத்தரங்-கத்தில் கலந்து கொண்டு அரிய கருத்துக்களை அள்ளி அள்ளி வழங்கியுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்-களே! உங்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், இந்த மாநாட்டை நடத்துகின்ற இந்த அரசின் சார்பாகவும் இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த மூன்று நாட்களாக கோவை திருநகரில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு எங்கே சென்றாலும், தமிழர், தமிழர்; தமிழ் முழக்கமிடுகின்றவர்கள் என்ற அளவிலே நிலை ஏற்பட்டு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகின்ற கருத்தரங்கங்களுக்கு, ஆய்வரங்கங்களுக்குப் பிறகு 27-ஆம் தேதி இதே அரங்கத்தில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டி-னுடைய நிறைவு விழாவில் நான் நிரம்ப பேச இருக்கின்றேன். இப்படிச் சொல்வதால் இன்றைக்குப் பேச மாட்டேன் என்று பொருள் அல்ல. பேசுவேன், ஆனாலும் அளவோடு. இங்கே ஆணைகள் பல இடப்பட்டன. அந்த ஆணைகளை எல்லாம் எப்படி நிறைவேற்றுவது என்பதைச் சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டு, நிறைவு நாளன்று பல்லாயிரக்-கணக்கில் - இதைவிட இன்னும் அதிகமாக பொங்கி வழிகின்ற மக்கள் கூட்டத்தில் இந்த மாநாட்டின் வாயிலாக இன்னென்ன காரியங்களிலே நாம் ஈடுபட இருக்கிறோம். அந்த காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் எப்படி கை கொடுக்க வேண்டும், எப்படி நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வேண்டு-கோளாக விடுக்க இருக்கிறேன். ஆணையிட்டுப் பழக்க-மில்லாதவன் நான்.

அதனால் நீங்கள் சொன்ன கருத்துக்களை, எடுத்து-ரைத்த ஆலோசனைகளை தமிழை வாழ வைக்க, தமிழுக்கு மேலும் வலிவும், பொலிவும் சேர்க்க என்-னென்ன செயல்களில் ஈடுபட வேண்டுமோ அவற்றை-யெல்லாம் இங்கே வீற்றிருக்கின்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் இட்ட ஆணைகளாக இங்கே அமர்ந்-திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களாகிய நீங்கள் தந்துள்ள கட்டளைகளாக ஏற்று பணியாற்று-வோம், தொண்டு புரிவோம் என்பதை என்னுடைய பேச்சின் முன்னுரையாக எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கூட்டணி கலைந்தாலும் சிதைந்தாலும் மீண்டும் சேர்க்கக் கூடிய சக்தியாக தமிழ் இருக்கிறது

இன்றைய தினம் இந்த மாநாட்டினுடைய கருத்தரங்கின் தலைப்பாக அமைந்திருப்பது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதாகும். இப்போது எங்கும் தமிழாக இருக்கிறதா அல்லது ஏங்கும் தமிழாக இருக்கிறதா (கைதட்டல்) என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கே பேசிய தலைவர்களுடைய பேச்சிலேயிருந்து இதை நான் வடிவமைத்து உங்களுக்குக் கூற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளேன். முதலில் இங்கே பேசிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் - ஏறத்தாழ 20க்கு மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமர்ந்-திருக்கின்ற காட்சிகளை நீங்கள் எல்லாம் பார்த்து, என்ன மறுபடியும் பழைய காலத்து கூட்டணியைப் பார்ப்பது போல் இருக்கிறதே என்றுகூட சிலர் வியந்தார்கள். நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன். கூட்டணி கலைந்தாலும், சிதைந்தாலும், பிரிந்தாலும் எல்லா கட்சிகளையும் மீண்டும் சேர்க்கக்கூடிய ஒரு சக்தி என்னிடத்திலே இருக்கிறது. அது ஒரு மந்திர சக்தி அல்ல, மாயா சக்தி அல்ல, அந்த சக்திகள் எல்லாம் நான் கற்ற, நான் பால் குடித்த தமிழ் என்-கின்ற சக்தி. (கைதட்டல்) அதை நீங்களும் உணர்ந்-திருக்கின்ற காரணத்தால்தான் இங்கே கடந்த இரண்டு மூன்று நாட்களாக மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கும் உங்களுடைய வேலைகளை, அலு-வல்களையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துவிட்டு தமிழை வாழ வைக்க, ஆள வைக்க, தமிழுக்கு காப்பளிக்க என்னென்ன வழி-முறைகள் இந்த மாநாட்டிலே கூறப்படுகின்றது என்பதை கேட்டு அவ்வாறு நடப்போம் என்று காத்திருக்கின்றீர்கள்.

எனக்கு இந்த மாநாட்டிலே மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்திலே உள்ள நம்முடைய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டது மாத்திரமல்ல, கலந்து கொள்வார்களோ? மாட்டார்களோ? என்ற எண்ணத்தோடு டெல்லியிலே இருந்த நம்முடைய சி.பி.எம். கட்சியினுடைய தலைவரும் சி.பி.அய். கட்சியினுடைய தலைவரும் வருவார்களோ, அதை தமிழ்நாட்டு அளவோடு நிறுத்திக் கொள்ளலாமா என்று எண்ணியது உண்டு.

ஆனால் தட்டியவுடன் திறக்கப்படும் என்பதைப்-போல் கேட்டவுடன் ஒத்துக் கொண்டு நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்களிலே ஒருவரான நண்பர் ராஜா அவர்களும், என்னுடைய பழைய நண்பரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யினுடைய தலைவர்களில் ஒருவரான யெச்சூரி அவர்-களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே இன்று பயணம் செய்து இந்த மாநாட்டிலே வந்து கலந்து கொண்டி-ருக்கிறார்கள். இரண்டு பேரை மட்டுமே குறிப்-பிட்டீர்களே மற்ற நாங்கள் எல்லாம் வரவில்லையா? என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் நான் சந்தேகத்திலே இருந்த; வரு-வார்-களா, மாட்டார்களா என்று கேள்விக்குறியாக இருந்த இரு கட்சிகளுடைய தலைவர்கள். இங்கே வந்தார்கள் என்றால் நான் அவர்களுக்கு நன்றி தெரி-விக்க விரும்பவில்லை. எங்களை இன்றைக்கு இந்த மேடையிலே ஒன்றுபடச் செய்த தமிழ்த் தாய்க்கு நன்றி தெரிவிக்க, தமிழுக்கு நன்றி தெரிவிக்கக் கட-மைப்-பட்டிருக்கிறேன். மொழி உணர்வோடு ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நாம்; எந்த மொழிக் குடும்பத்திற்குரியவர்களோ அந்த மொழிக்குத் தரப்படவேண்டிய தகுதிகளை தமிழ்நாட்டிலும் சரி, வடநாட்டிலும் சரி, டெல்லியிலும் சரி, சென்னை-யிலும் சரி; தந்தாக வேண்டும், அதற்கென அறப்-போராட்டத்தினை நாம் அமைதியாக நடத்திட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.

இங்கே அருமை நண்பர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் தங்கபாலு பேசும்போது, பத்துக் கோரிக்கைகளை வைத்து இவைகளை-யெல்லாம் நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டார். எனக்கு ஒரு சந்தேகம். என்னையே நான் ஒருமுறை சற்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். பக்கத்திலே இருந்த நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடம் கூட, நான்தானா பாருங்கள் என்றுகூடச் சொன்னேன். என்ன என்று கேட்டார். தங்கபாலு நமக்கு கோரிக்கை வைக்கிறாரே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கோரிக்கை வைக்க வேண்-டிய இடத்தை விட்டுவிட்டு, இங்கே வைக்கிறார் என்றால் எதை எந்த இடத்திலே வைத்தால் நிறைவேறும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது பாருங்கள் என்று நான் அவரிடத்திலே சொல்ல, அவரும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். நான் இதனை வேடிக்கைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே வடபுலத்திலே உள்ளவர்கள் அங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலை-வர்கள் நாட்டை ஆளுகின்ற தகுதி படைத்தவர்கள், ஆளத் தகுதி படைத்தவர்கள் -அவர்களுக்கு எத்த-னையோ அலுவல்கள், எத்தனையோ நெருக்கடிகள் இருக்கின்ற காலகட்டத்தில், நம்முடைய பிரச்சினை-களை உடனடியாக, முறையிட்ட மாத்திரத்தில்; நிறைவேற்றுவது என்பது இயலாத காரியம்தான். ஏனென்றால், இந்தியாவிலே தமிழ் மொழி மாத்திரமல்ல எத்தனையோ மொழிகளைச் சார்ந்த மக்கள், அந்த மக்களுக்காக இருக்கின்ற மாநிலங்கள் அவர்களுக்கென அமைந்துள்ள நிருவாகங்கள், இந்த நிருவாகத்தில் ஏற்படுகின்ற குழப்பங்கள் இவைகளை யெல்லாம் கவனிக்க வேண்டிய இடத்திலேயுள்ள -_ ஆளுகின்ற டெல்லிப் பட்டினத்திலே உள்ளவர்-களுக்கு நாம் சொன்ன உடனே உதாரணமாக உயர் நீதிமன்றத்திலே தமிழ் வேண்டும் என்று ஒரு தந்தி கொடுத்தால், மறுநாளே இந்தா, ஏற்றுக்கொள் என்று சொல்லுகின்ற அளவிற்கு அவர்கள் தயாராக இல்லாததற்கு காரணம் மனம் இல்லை என்றல்ல, அவர்களுக்கு அவ்வளவு அலுவல், அவ்வளவு நெருக்கடி. ஆகவே அவைகளையெல்லாம் தாண்டிக் கொண்டுதான் நம்மை கவனிக்க வேண்டியிருக்கிறது.

அப்படி தாண்டிக் கொண்டு இங்கே வருகின்ற அந்த கஷ்டத்தை போக்குவதற்காகத்தான் நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் இங்கே குறிப்பிட்டுள்ளதைப்போல அவர்களும் அதை உணர்த்த வேண்டிய இடத்திலே உணர்த்த வேண்டும், இங்கே இந்த மாநாட்டிலே - என்னிடத்-திலே உணர்த்தி தமிழ்நாடு அரசு இதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அதற்கு என்ன பொருள்? மத்திய அரசு செய்ய முடியாது என்று பொருள் அல்ல, நீங்கள் செய்வதற்கு - தமிழ்நாடு அரசு துணையாக இருக்கும் - அவர்களுக்கு நாங்களும் துணையாக இருப்போம் என்று குறிப்பிடுகின்ற அந்த வகையிலேதான் அந்தக் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

பத்து கோரிக்கையல்ல பத்து கட்டளைகளை நிறைவேற்றக் கூடியவன்

10 கோரிக்கை என்றார், தமிழுக்காக என்றால் - 10 கோரிக்கையல்ல, 10 கட்டளைகளை நிறைவேற்றக் கூடியவன் நான் என்பதை அவர் அறியாதவர் அல்ல. உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்று முழங்கிய தலைவர்களுடைய வழிவந்தவர்கள் நாம், செய்து காட்டியவர்கள் நாம். அதை வரலாறாக ஆக்கி மகிழ்ந்-தவர்கள் நாம், அந்த வீரவரலாற்றுக்கு உரியவர்கள் நாம். எனவே தான் தமிழகத்திலே ஏற்படவேண்டிய மறுமலர்ச்சி இந்த ஊர்வலத்தால், மாநாட்டால், பெரும் கூட்டத்தால் இன்றைக்கு ஏறத்தாழ 20 அல்லது 22 இடங்களில் நடைபெறுகின்ற அரங்கு-களால் அந்த அரங்குகளில் நிகழ்கின்ற அமர்வு-களால் -_ அந்த அமர்வுகளில் நடைபெறுகின்ற ஆய்வுரை-களால் முடிந்து விடக் கூடியது அல்ல. நாம் ஒவ்-வொரு-வரும் நம்முடைய மொழிக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், அதற்கு முதல் கட்டமாகத்தான் இங்கே பேசிய சில தலைவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்த மாநாட்டில் குழுமியிருக்கின்ற நீங்களெல்லாம் அந்த பயிற்சியைப் பெற வேண்டும், அந்த பயிற்சியைப் பெற இன்று முதல் உங்களை ஆயத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழிலே தான் நாம் பேசுவது, ஒருவருக்கொருவர் உரையாடுவது என்று ஒரு முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை நான் எடுத்துக் கொண்-டால் அது ஒன்றும் ஆச்சரியமல்ல, ஏனென்றால் எனக்கு தமிழைத் தவிர ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளிலே அவ்வளவு பயிற்சி இல்லை, இவருக்கு ஆங்கிலம் தெரியாது ஆகவே தான் தமிழிலே பேச வேண்டும் என்று சொல்லுகிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் என்னை-விட அதிகம் ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள், பல மொழி பயின்றவர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் கூட பிற மொழிகளில் பயிற்சி பெற்றவர்கள், பிற மொழி வல்லுநர்களாக இருந்தவர்கள் கூட _ திரு.வி.க. போன்றவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் -இவர்களெல்லாம் ஆங்கிலம் பயிலாத-வர்கள் அல்ல, ஆங்கிலம் பயின்றவர்கள் தான், ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்கள் தான், தமிழ் வளர்ச்-சிக்கு இந்த வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். தமிழில் பேச வேண்டும், தமிழில் பயிற்சி பெற வேண்டும், வீட்டில் தமிழ் தவழ வேண்டும், குழந்தை தவழ்ந்தால் போதாது, தமிழும் தவழ்ந்தாக வேண்டும் என்று அவர்கள் பிற மொழி பலவற்றை பயின்ற-வர்-கள் கூட தமிழர்கள் என்றால்; அந்த தமிழர்கள் தமிழர்-களாக இருக்க வேண்டும் என்பதை நான் கூறிய-தைப்போல் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், ஆங்கிலத்தை தவிர்த்து விட்டு தமிழிலே பேச வேண்டும், தமிழிலே எழுத வேண்டும், தமிழிலே அச்சடிக்க வேண்டும் என்றெல்லாம் விரும்பிய நேரத்தில் பல விபரீதங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதை காரணமாகக் காட்டி கூட இப்படியெல்லாம் தமிழில் சொன்னால் விபரீதங்கள் ஏற்படுகின்றன என்று நமக்கு சுட்டிக் காட்டியவர்களெல்லாம் உண்டு. ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்ப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. தமிழ்நாட்டில் பெரும் மழை பொழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து எல்லாப் பகுதி-களிலும் உள்ள சாலைகள், இரயில்வே லைன்கள் அனைத்தும் வெள்ளத்திலே அடித்துச் செல்லப்ப-ட்-டதை, ஆங்கில பத்திரிகை ஒன்றிலே வெளியிட்டார்-கள். என்ன வெளியிட்டார்கள் என்றால் ‘‘On account of heavy rain, slippers were washed away’’ என்று இருந்த ஆங்கில செய்தியை தமிழ் பத்திரிகையிலே எப்படி வெளியிட்டார்கள் என்றால், பெரும் மழையின் காரணமாக தண்டவாளத்திலே படுத்திருந்த -_ தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று வெளியிட்-டிருந்-தார்கள். ஆனால் உண்மையிலேயே ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த செய்தி அது அல்ல ‘‘On account of heavy rain slippers were washed away’’ என்பதில் ஸ்லீப்பர்ஸ் என்பதை தூங்கிக் கொண்டி-ருந்தவர்கள் என்று மொழிபெயர்த்து இரயில்வே லயனில் படுத்திருந்-தவர்-கள் செத்தார்கள் என்று செய்தி வெளியிட்டார்-கள். ஆனால் உண்மை அதுவல்ல. இறந்தவர்கள் தூங்கிக் கொண்டி-ருந்த-வர்கள் அல்லர்; பெரும் மழையில் இரயில்வேயில் தண்டவாளத்திற்கு கீழேயுள்ள சீலிப்பர்கள் என்ற மரப் பலகைகள் அடித்-துச் செல்லப்பட்டன என்பதை தூங்கிக் கொண்டி-ருந்த மக்கள் அடித்துச் செல்லப்-பட்டார்கள் என்று மொழிபெயர்த்தார்கள். (கைதட்டல்) அப்படி மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் தேவையில்லை. ஒழுங்கான மொழிபெயர்ப்புத் தமிழ் தான் நமக்கு தேவை. அதற்காக நான் சொல்லுகிறேன் என்பதற்காக இந்த மாநாட்டிலே தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் ஏற்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி மொழிபெயர்ப்பில் யாரும் இறங்காமல், சரியான மொழிபெயர்ப்போடு தமிழை வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சங்க காலத்திலேயிருந்து இன்று வரையிலே தமிழ்; பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறது. மூவேந்தர்களுடைய ஆட்சியில் தமிழ் ஆட்சி மொழியாகவும், நிருவாக மொழியாகவும் விளங்கியதால் சிறந்து விளங்கியது. அருமையான இலக்கியங்கள் உருவாகி இன்றளவும் தமிழின் தனித்தன்மையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த இலக்கியங்கள் தான் சங்க இலக்கியங்கள் என்றும், இடைக்கால இலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆனால் சங்க காலத்திற்குப் பின் வந்த ஒரு ஆட்சி -_ களப்பிரர்களுடைய ஆட்சி. அவர்கள் தமிழை விடுத்து பாலி மொழியை ஆதரித்த காரணத்தால், அந்த ஆட்சியே இருண்ட கால ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டது. அவர்கள் ஆட்சியில் தமிழுக்கு வாழ்வில்லாமல் போயிற்று. தமிழும் இருளில் தள்ளப்பட்டது ஆறு, ஏழு, எட்டாம் நூற்றாண்டு-களில் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் பிராக்கிருத மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் ஆதரவு தந்த காரணத்தால் தமிழின் வளர்ச்சி தடைப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் தஞ்சைப் பகுதியில் இடைக்காலச் சோழர் ஆட்சியும், மதுரைப் பகுதியில் பாண்டியர் ஆட்சியும் தோன்றிய பிறகுதான், பதினான்காம் நூற்றாண்டு வரையிலே தமிழ் மக்களுக்கு நல்லாட்சிகள் வழங்கப்பட்டன. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இடைக்காலத்திலே இருபதாம் நூற்றாண்டு வரையிலே தமிழ் மொழி சீரற்றுப் போயிற்று. அதையேதான் இன்றைக்கு நாம் நாட்டிலே கவலையோடு காணுகின்ற ஒரு காட்சியாக இருப்பதை அறியமுடிகிறது.

செம்மொழி என்ற தகுதியை தமிழுக்கு பெற்றிருக்கிறோம்

இந்த நிலையை மாற்றத்தான் பரிதிமாற் கலைஞர் போன்றவர்கள் எப்படியாவது இந்த மொழிக்கு உரிய தகுதியான செம்மொழி என்ற பெயரை உரித்தாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். பரிதிமாற் கலைஞர் பார்ப்பனர்தான், சூரிய நாராயண சாஸ்திரிதான்; அவர் தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொள்ளுகின்ற அளவிற்கு தமிழ் உணர்வு கொண்டவராக, அந்த உணர்வை வெளிப்படுத்துபவராக, அந்த உணர்வை உரிய இடத்திலே சொல்பவராக இருந்த காரணத்தாலும், அவரைத் தொடர்ந்து கரந்தை தமிழ்ச் சங்கத்தினுடைய புலவர் பெருமக்களும், இன்றளவும் உள்ள புலவர்களும் தொடர்ந்து போர்க் குரல் கொடுத்த காரணத்தாலும் இன்றைக்கு நாம் ஆட்சிப் பொறுப்பை இங்கே ஏற்று, அங்கே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களோடு, இருப்பவர்களோடு கொண்டுள்ள உறவின் காரணமாக, எடுத்துச் சொல்லவேண்டியதை, எடுத்துச் சொல்லவேண்டிய முறையில் எடுத்துச் சொல்லி செம்மொழி என்கின்ற அந்தத் தகுதியை தமிழுக்குப் பெற்றிருக்கின்றோம்.

அதைப்பற்றி எனக்கு முன்னால் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள் செம்மொழித் தகுதியை நான் பெற்றேன் என்பதையும் நம்முடைய தங்கபாலு சொன்னார், சோனியா காந்தி அவர்கள் அப்போது எழுதிய கடிதத்தையும் இங்கே குறிப்பிட்டார். நான் அந்தக் கடிதத்தை திருச்சியிலே நடைபெற்ற ஒரு மாநாட்டிலே எடுத்துக் காட்டி, படித்துக் காட்டிச் சொன்னேன். இது ஒரு கடிதமாக நான் வைத்துக் காப்பாற்றக் கூடியதல்ல. என்னுடைய கொள்ளுப் பெயரன், கொள்ளுப் பெயர்த்திகள் - இவர்கள் எல்லாம் எடுத்துப் படித்து என்னுடைய தாத்தா காலத்திலே வைக்கப்பட்ட செப்பேடு என்று சொல்லுகின்ற அளவிற்கு இது புகழ் பெற்ற கடிதம் என்று அப்போது நான் சொன்னேன். சொன்னதற்குக் காரணம், அந்த அளவிற்கு செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைக்காது என்ற நிலை! அந்த நிலையை மாற்றிய பெருமை எனக்கல்ல; தமிழர்களுக்கு மாத்திரமல்ல; அந்தப் பெருமையை நமக்கு வழங்கியது நம்முடைய உணர்வு என்றாலும் கூட, நம்முடைய இடைவிடாத போராட்டம் என்றாலும் கூட, அதை வழங்க முடிவு செய்து. அது வழங்கப்பட்டது என்று அறிவித்து, அறிவித்த பிறகும் இந்த செம்மொழிக்கான அலுவலகம் தமிழகத்திலேதான் இருக்க வேண்டும், இப்போது கர்நாடகத்திலே, மைசூரிலே இருக்கின்றது. இதை மாற்றி நீங்கள் தரவேண்டும் என்று கேட்ட நேரத்தில் அதற்கும் ஒப்புதல் அளித்து அந்த அலுவலகத்தை இன்றைக்கு தமிழகத்திற்கே திருப்பித் தந்து விட்டார்கள். அது மைசூரிலே இருந்த அலுவலகம். அந்த அலுவலகம் அங்கே இருந்து மாற்றப்பட்டு, தமிழ் நாட்டிற்கு, சென்னை மாநகரத்திற்கு அந்த அலுவலகம் வந்துவிட்டது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அது மாத்திரமல்ல,. அந்த அலுவலகத்தை இங்கே சென்னையிலே வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு இடம் கிடைக்க வில்லை. அதற்காக சென்னையிலே இருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்திலே உள்ள ஒரு பகுதியில் ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்திலே புதிய கட்டடங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம். அதற்கு இடையிலே அதை ஒரு சிறிய இடத்தில் வாடகைக்குப் பிடித்து அதை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு இடையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த அரசின் சார்பாக எடுக்கப்பட்டுள்ள ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கின்றேன். செம்மொழி, இவ்வளவு பாடுபட்டு நமக்குக் கிடைத்த பெரிய வெற்றி. அந்த வெற்றிக்குரிய செம்மொழி அலுவலகத்தை, தலைமை அலுவலகத்தை ஏதோ ஒரு வாடகை இடத்திலே வைத்திருப்பதா, ஏதோ பாலாறு இல்லம் என்று இருந்த விடுதியிலே வைத்திருப்பதா என்று யோசித்து இப்போது நாம் புதிய சட்டசபைக்கு, தலைமைச் செயலகத்திற்கு கட்டடங்கள் கட்டியபிறகு, புதிய சட்டசபையை அங்கே ஆரம்பித்த பிறகு, பழைய சட்டசபை இருந்த கோட்டையையே இந்த செம்மொழித் தமிழ் அலுவலகத்திற்கு என்று நாம் முடிவு செய்திருக்கின்றோம். நீங்கள் சென்னைக்கு வந்தால், கோட்டைக்கு வந்தால், அங்கு செம்மொழி அலுவலகத்தைக் காணலாம், செம்மொழி அலுவலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே அமைகிறது. அதுதான் செம்மொழி அலுவலகம், அந்த அலுவலகத்திலே செம்மொழி ஆய்வுக்கான பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு - நான் சென்னைக்குத் திரும்புவதற்-குள்ளாக அந்த வேலைகூட முடிந்திருக்கும். அவ்வளவு புத்தகங்களும் வந்து இறங்கிவிட்டன. அவைகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இனி செயின்ட் ஜார்ஜ் கோட்டை செம்மொழித் தலைமை அலுவலகம் என்று இருக்கும் .

நான் அமர்ந்து வேலை பார்த்த முதலமைச்சர் அலுவலகம் - செம்மொழி தலைமை அலுவலகத்தின் தலைவருடைய அலுவலகம் என்று முதலமைச்-சருடைய அலுவலகம் இனிமேல் மாற்றப்பட்டிருக்கும்.

ஆகவே, இவைகளை எல்லாம் சொல்வதற்குக் காரணம் நீங்கள் திடீரென்று சென்னைக்கு வந்து என்ன எல்லாம் ஒரே மாற்றமாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படக் கூடாது என்பதற்காக முதலிலேயே இந்த மாநாட்டிலே இந்த விவரங்களை எல்லாம் சொல்லி வைக்கின்றேன்.

பட்ஜெட் போன்று நிறைவு விழா பேச்சு

இந்த விவரங்களையெல்லாம் சொல்லி வைப்பதற்குக் காரணம், நாம் செம்மொழியை பெற்றிருப்பது மாத்திரம் அல்ல; அது வளர, வாழ, வடிவம் பெற தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொண்டிருக்கிறோம், அமைத்து விட்டோம், இனியும் அமைப்போம்; அந்த செம்மொழிக்கு எந்த அளவிற்கு வளத்தைச் சேர்க்க முடியுமோ, வலிவைச் சேர்க்க முடியுமோ, பொலிவைச் சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்ப்போம், செம்மொழி என்ற பெயரை வாங்கிவிட்டால் மாத்திரம் போதாது, அதைத்தான் இங்கே நடைபெறுகின்ற ஆய்வு அரங்கங்களில், கருத்தரங்-கங்களில் இங்கே பேசிய தலைவர்களுடைய பேச்சுக்களில் நீங்கள் கண்டீர்கள். மொழிப் பெயரை மாற்றி விட்டால் மாத்திரம் போதாது, செம்மொழி என்கின்ற வைரக் கிரீடத்தை வைத்துவிட்டால் மாத்திரம் போதாது; இந்த மொழிக்கு உரியவர்கள்; எதிர்காலத்திலே உலகமெல்லாம் தங்களுடைய செல்வாக்கை, உலகமெல்லாம் தங்களுடைய புகழை பரப்புகின்ற அளவிற்கு - இங்கே உள்ள தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று, கணினி உலகத்தில் அவர்கள் களிப்போடு நடைபோடுவதற்கு வழிவகை வேண்டும் என்றெல்லாம் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்காமல் இல்லை. சிந்திக்கிறோம். இந்த மாநாட்டில் நீங்கள் கட்டளையிடவும், அந்த கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றவும் தான் நாங்கள் இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக் கின்றோமேயல்லாமல், நாங்கள் ஏதோ உங்களுக்குச் சொல்லுகிறோம், இதன்படி நடந்து செல்லுங்கள் என்று அல்ல. நிச்சயமாக கடந்த மூன்று நாட்களாக நீங்கள் தந்துள்ள யோசனைகளை, அறிவுரைகளை, கட்டளைகளை அனைத்தையும் ஆணைகளாக ஏற்று நாளை மறுநாள் நடைபெறுகின்ற இந்த மாநாட்டினுடைய நிறைவு உரை அரங்கத்தில் நம்முடைய மத்திய நிதி அமைச்சர் வரவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரும் வர இருக்கிறார். அவர்கள் கலந்து கொள்கின்ற அந்த மாநாட்டில் இந்த மாநாட்டிற்கான தபால்தலை வெளி-யிடப்படவிருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளோடு நானும் நிறைவுரை ஆற்ற இருக்கிறேன். என்னுடைய உள்ளத்திலே நான்கு நாட்களாக பதிந்திருக்கின்ற எண்ணங்களையெல்லாம், இனிப்பான எண்-ணங்களையெல்லாம், உணர்வுகளையெல்லாம் ஒன்று திரட்டி வருங்காலத்திலே இந்த செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழர்களுக்கு, தமிழ் மக்களுக்கு தமிழ் மொழிக்கு என்னென்ன செய்யப் போகின்றோம். ஆக்கப்பூர்வமாக என்னென்ன காரியங்களை செய்யப்போகிறோம். அரசின் சார்பாகவும் உங்களுடைய ஆதரவோடும் என்னென்ன செய்யப் போகின்றோம் என்பதையெல்லாம் நிறைவு விழாவிலே நான் வெளியிட இருக்கின்றேன். கிட்டத் தட்ட ஒரு பட்ஜெட் படிப்பது போல அந்த நிறைவு விழாவிலே பல செய்திகளை சொல்ல இருக்கின்றேன். அங்கே சந்திக்கின்றேன் என்று கூறி விடை-பெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment