கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 31, 2010

11 இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி



தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றப் பின் இதுவரை 11 சட்டமன்ற இடைத்தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. இவை அனைத்திலுமே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வென்றுள்ளது.

1. முதல் இடைத் தேர்தல் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணமடைந்ததைத் தொடர்ந்து மதுரை மத்திய தொகுதியில் நடந்தது. 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கவுஸ் பாட்ஷா வெற்றி பெற்றார்.

2. மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

3 திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வீர. இளவரசன் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றார்.


4. பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தம்பித்துரை(அ.தி.மு.க.) பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து அங்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே. நரசிம்மன் வெற்றி பெற்றார்.

5. தொண்டா முத்தூர் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ. கண்ணப்பன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது.

இதில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.கந்தசாமி வெற்றி பெற்றார்.

6. இளையான்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ. கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

இதனையடுத்து இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப. மதியரசன் வென்றார்.

7. ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணமடைந்ததைத் தொடர்ந்து இங்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி வெற்றி பெற்றார்.

8. கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த கம்பம் என். ராமகிருஷ்ணன் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் இணைந்ததை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில், தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்ட ராமகிருஷ்ணன் மீண்டும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

9. வந்தவாசி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி. ஜெயராமன் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஜெயராமன் மகன் கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.

10. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற அனிதாராதா கிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார். இதனையடுத்து இத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் வெற்றி பெற்றார்.

11. பென்னாகரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் மரணமடைந்ததை அடுத்து இத்தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட பெரியண்ணன் மகன் இன்பசேகரன் வெற்றி பெற்று உள்ளார்.

ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 11 இடைத் தேர்தல்களில் அனைத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் தி.மு.க. 8 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், கம்பம் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல்களில் போட்டியிடாமல் அ.தி.மு.க. புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment