கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 17, 2010

சாமியாருக்கு கால் பிடிக்க போகிறேன் என்றால் மனமகிழ்ச்சியோடு பெண்களை அனுப்பி வைக்கிறார்கள்: கனிமொழி


மணியம்மை நினைவு நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டுவிழா, சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.


விழாவுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கு.ம.ராமாத்தாள் தலைமைதாங்கினார். மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூலை கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டார். இதை குஞ்சிதம் நடராஜன், வழக்கறிஞர் தெ.வீரமர்த்தினி, ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

அப்போது அவர், ’’ பெண்கள் இந்த சமூகத்திலே எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு திக்கிலே திசையிலே சென்று கொண்டு இருக்கிறார்கள். நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எத்தனை ஆசிரமங்கள் எத்தனை சாமியார்கள். அவர்களது நம்பிக்கை எல்லாம் உடைக்கக்கூடியவர்கள்.


நான் எந்த சாமியாரையும், யாருடைய தனிப்பட்ட விவகாரத்திலும் எந்த கேள்வியும் எழுப்பக்கூடியவராக இல்லை. அதுபற்றிய அக்கரை நமக்கு இல்லை. ஆனால் அந்த ஆசிரமத்தை முன்எடுத்து நடத்தக்கூடிய அவர்கள், அவர்களை நம்பி வரக்கூடியவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்களா? என்ற அந்த கேள்வியை நம்மைபார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினையால் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களாக பெண்களாகத்தான் உள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த சமூகத்தில் பெண்கள் தனது குறைகளை, தனது கனவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத அடிமையாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண் கைதேர்ந்த இசை கலைஞராக இருக்கலாம், ஆனால் உங்கள் கணவர், உங்கள் தாய் தந்தையர் பாடக்கூடாது மேடையில் ஆடக்கூடாது என்று தடை விதிக்கும் போதும் கணவர் எனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போதும் அவள் கண்ட கனவுகள் அந்த ஒரு நிமிடத்தில் உடைந்து தூள் தூளாகி விடுகிறது.

இப்படி பெண்களின் எத்தனையோ கனவுகள் உடைக்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக ஒரு பெண் ஒரு வைத்தியரை பார்க்கப்போகிறேன் என்றால் குடும்பமே பொங்கி எழும். நீ எப்படி அங்கே போக முடியும் நான் உன்னை நன்றாக வைத்திருக்கவில்லையா 3 வேளை சாப்பாடு, கட்ட துணி தரவில்லையா, இதை விட நன்றாக வைத்திருப்பவர்கள் யாராக இருக்க முடியும், என்ன உனக்கு மன அழுத்தம் என்று கூறி டாக்டரை பார்க்க போகக்கூடாது என்று மறுப்பார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அதே பெண் எனக்கு மனது சரி இல்லை, நான் கோயிலுக்கு போகிறேன், நான் ஒரு சாமியாருக்கு கால் பிடிக்கப்போகிறேன் என்றால், போய் வா என்ற மிகுந்த மன மகிழ்ச்சியோடு அவரை ஒன்றாக நின்று வழி அனுப்புகிறது. அப்படி என்றால் அந்த பெண்ணின் போக்கிடம் என்னதாக இருக்க முடியும்" என்றும்

’’தந்தை பெரியாரை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்காவிட்டாலும், மணியம்மையை சந்திக்கும் வாய்ப்பை ஒரு சில தடவை பெற்றிருக்கிறேன். அவரச காலத்தில் அவர் எவ்வளவு உறுதியோடு இருந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அந்த நேரத்தில் எனது வீட்டுக்கு சோதனை என்ற பெயரால் 10, 15 பேர் வந்து சோதனை என்ற பெயரில் பூந்தொட்டிகளைக்கூட விட்டுவிடாமல் சோதனை செய்வார்கள்.

எனது தாயார் ராஜாத்திஅம்மாளை வருமானவரி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று காலை முதல் மாலைவரை கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு நாள் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது மணியம்மையார் என்னிடம் வந்து அம்மா எங்கே என்று கேட்டார். நான் வீட்டை சுற்றி சுற்றிவருகிறேன் வீட்டில் யாருமே இல்லையா என்று கேட்டார்.

அம்மா சமையல் செய்துகொண்டு இருக்கிறார் என்று நான் சொன்னபோது இது என்ன கொடுமை வீட்டில் என்ன என்று கேட்கக்கூட ஆள் இல்லாத நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்களா? என்று கேட்டபடி கண்ணீரோடு என்னை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று எனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு செல்கிறேன் என்று கூறியபோது கூட எனது தாயார் இந்த நிகழ்ச்சியை கூறி கண்கலங்கினார். அப்படிப்பட்ட அன்பு உள்ளம் படைத்தவர்தான் மணியம்மை’’ என்றும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment