கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 5, 2010

தமிழ்நாடே என் குடும்பம் தான்: கலைஞர்


தமிழ்நாடே என் குடும்பம் தான் என்று சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை மியூசிக் அகடாமியில் நடைபெற்ற எழிலரசி வீணை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எழிலரசி இவ்வுளவு அருமையாக உங்களுடைய பாராட்டுக்களையெல்லாம் பெறுகின்ற அளவிற்கு இந்த வீணையை இசைப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்று அழைத்த போது கூட அழைப்பிதழில் என்னுடைய பெயர் போட்டுயிருப்பதாக எனக்கு தெரியாது. என்னுடைய பெயர் மாத்திரமல்ல, இளையராஜாவின் பெயரும், நித்யஸ்ரீயின் பெயரும் இருப்பது கூட எனக்கு தெரியாது. இங்கே வந்து அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட பிறகு தான் எனக்கே அது தெரியும்.

எழிலரசியினுடைய வீணை நாதத்தை இசை நுட்பத்தை இவற்றையெல்லாம் கேட்ட போதும், பார்த்த போதும், இனி நமக்கு கவலையில்லை, என்றைக்காவது ஒரு நாள் மனக்கஷ்டம் வரும் போது எழிலரசியை கூப்பிட்டு வீணை வாசிக்க சொல்லலாம் என்ற ஆறுதல்.

பாரதிதாசனை பற்றி இங்கே குறிப்பிடப்பட்டது. துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா? என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார். யாழ் எடுத்து இன்பம் சேர்த்தால் தான் அந்த துன்பத்தை போக்க முடியும் என்பது பாரதிதாசன் கண்ட கனவு. அவர் எண்ணிய எண்ணம். அதைபோல துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க அடிக்கடி நான் எழிலரசியை அழைக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் துன்பம் அடிக்கடி வரும் நேரும் என்று அர்த்தம் அல்ல. நேருகின்ற துன்பத்தை துடைப்பதற்கு எழிலரசியின் வீணை பயன்படுமென்று நான் நம்புகிறேன். அந்த வகையில் என்னுடைய குடும்பத்தில் எல்லோருமே கலைஞானம் கொண்டவர்கள் தான்.

என்னுடைய வீட்டிலே உள்ள பிள்ளைகளின் பெயர்களையெல்லாம் பார்த்தாலே எழிலரசி என்றும், கயல்விழி என்றும், ஓவியா என்றும் இப்படியெல்லாம் தமிழிலேயே பெயர்கள் எல்லாம் இருக்கும். அப்படி தமிழிலேயே பெயர்களையெல்லாம் வைத்த காரணத்தாலோ என்னவோ, எல்லோருமே தமிழ் இன்பத்தை பொழிகின்றவர்களாக விளங்குகிறார்கள் என்னுடைய குடும்பம், பெரிய குடும்பம். இந்த பெரிய குடும்பத்தில் மலர்களாக அரும்புகளாக பிஞ்சுகளாக பலரை பார்க்கின்ற பழமாக நான் இருக்கின்றேன். இந்த பிஞ்சுகளும், அரும்புகளும், மலர்களும் மலர்ந்து முற்றி கனிகளாகி உங்களுக்கெல்லாம் பயன்படுகின்ற தமிழர்களுக்கு பயன்படுகின்ற அந்த காலத்தை தான் நான் விரும்புகிறேன்.

நித்யஸ்ரீ இங்கே பேசும்போது அவருடைய பாட்டியார் என்னை பற்றி சொன்னதை குறிப்பிட்டார்கள். மும்மூர்த்திகள் பிறந்த திருவாரூர் என்னுடைய ஊர் என்பதால் நானும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்கள். எப்படியோ மும்மூர்த்திகளோ அல்லவோ மூன்று என்பது என்னுடைய முன்னேற்றத்திற்கு நான் வழிபடுகின்ற வார்த்தைகளாக நான் பின்பற்றுகின்ற வார்த்தைகளாக அமைந்திருக்கின்றன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இந்த மூன்றும் தான் எனக்கு வழிகாட்டக்கூடிய வாசகங்கள்.

இந்த வாசகங்களை பின்பற்றி நடைபெறுகின்ற என்னுடைய வாழ்க்கையில் எந்த சேதாரமும் வராமல் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் என்னோடு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்ற பிள்ளைகள் பேரன்கள், பேத்திகள் என்று இவ்வுளவு பேர் இருக்கிறார்கள் என்று ஒரு வட்டத்திற்குள்ளே நான் குறிப்பிட்டு காட்ட விரும்பவில்லை. இளையராஜா சொன்னது போல தமிழ்நாடே என்னுடைய குடும்பம் தான். தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் அத்தனைபேருக்கும் நான் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த சிறிய மண்டபத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரங்கத்தை பார்த்தும், எனக்கு வந்த நினைவு இதை போன்றதொரு அரங்கம் நம்முடைய உலக தமிழ் செம்மொழி மாநாட்டிலே ஒன்றையாவது அமைக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் தான் எனக்கேற்பட்டது.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார்.


No comments:

Post a Comment