கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 24, 2010

தமிழக எம்பிக்களின் பார்லிமெண்ட் வருகை பட்டியல்


நடந்து முடிந்த பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியாக 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளன. ஆக மொத்தம் 36 நாட்கள் பார்லிமென்ட் நடந்துள்ளது.


அதிக நாட்கள் வந்தவராக வடசென்னை எம்.பி., இளங்கோவனும், குறைந்த நாட்களே அவைக்கு வந்தவராக தென்சென்னை எம்.பி., ராஜேந்திரனும் இருக்கின்றனர்.

பார்லிமெண்ட்டுக்கு அதிக நாட்கள் வந்தவர்கள்

வடசென்னை திமுக எம்பி இளங்கோவன் 36 நாட்கள்
தென்காசி லிங்கம், காஞ்சிபுரம் விஸ்வநாதன், நெல்லை ராமசுப்பு ஆகியோர் 35 நாட்கள்
ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு 33 நாட்கள்
திண்டுக்கல் சித்தன், விருதுநகர் மாணிக்தாகூர் ஆகியோர் 32 நாட்கள்
தேனி ஆருண், திருவண்ணாமலை வேணுகோபால் 25 நாட்கள்
கோவை நடராஜன் 24 நாட்கள்
வேலூர் அப்துல் ரகுமான் 23 நாட்கள்
சேலம் செம்மலை 22 நாட்கள்
தாமரைச்செல்வன், ஹெலன் டேவிட்சன் 19 நாட்கள்
தூத்துக்குடி ஜெயதுரை 17 நாட்கள்
திருப்பூர் சிவசாமி 15 நாட்கள்
திருச்சி குமார், விழுப்புரம் ஆனந்தன், நாகப்பட்டினம் விஜயன் ஆகியோர் 14 நாட்கள்
முருகேசன், ஆதிசங்கர் 14 நாட்கள்
பொள்ளாச்சி சுகுமார், சிதம்பரம் திருமாவளவன், திருவள்ளூர் வேணுகோபால் ஆகியோர் 13 நாட்கள்

பார்லிமெண்டுக்கு குறைந்த நாட்களே வந்தவர்கள்


தென்சென்னை எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் 4 நாட்கள்
மயிலாடுதுறை மணியன் 5 நாட்கள்
பார்லிமென்ட் அ.தி.மு.க., கட்சித் தலைவரும் கரூர் எம்.பி.,யுமான தம்பிதுரை 8 நாட்கள்
ராமநாதபுரம் ரித்தீசும், சுகவனமும் தலா 10 நாட்கள்


அமைச்சர்கள் யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதில்லை என்பதால், அவர்கள் பற்றிய விவரம் இதில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்லிமென்டின் அவை நடவடிக்கைகளில், தமிழக எம்.பி.,க்கள் பெரிய அளவில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காவிட்டாலும், அவைக்கு ஒழுங்காக தினமும் வருவோரது எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போவது கவலையளிப்பதாகவே உள்ளது.


No comments:

Post a Comment