பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பெரியண்ணன் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு கடந்த 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளராக மறைந்த பெரியண்ணன் மகன் இன்பசேகரன் போட்டியிட்டார். பாமக சார்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி மகன் தமிழ் குமரன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தர்மபுரி அதிமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் போட்டியிட்டார். தேமுதிக சார்பில் காவேரி வர்மன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 31 பேர் போட்டியிட்டனர்.
இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாமக வேட்பாளர் தமிழ் குமரன் 41,285 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அன்பழகன் 26,787 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்தத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுக டெபாசிட் இழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக டெபாசிட் இழந்தது அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல்களில் எப்போதும் டெபாசிட்டை இழக்கும் தேமுதிக, நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலிலும் டெபாசிட்டை இழந்தது.இன்று காலை முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில், திமுக வேட்பாளர் இன்பசேகரனுக்கு 32 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு 3 ஒட்டுகள் கிடைத்துள்ளன. பாமக வேட்பாளருக்கு 2 ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேமுதிக வேட்பாளருக்கு தபால் ஒட்டுகள் விழவில்லை.
No comments:
Post a Comment