கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 30, 2010

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா?


முதல்வர் கருணாநிதி பதில் :

இலங்கைத் தமிழர் களுக்காக தி.மு.க. எந்தெந்த வகை யில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், ஏன் இந்தியத் தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள் தான் போராடப் புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல் -

1956ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் நடை பெற்ற சிதம்பரம் கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறு கிறது.

* 24.8.1977 அன்று சென்னை யிலே 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடை களும் அன்று சென்னையில் மூடப் பட்டன.

* 13-8-1981 அன்று பிரத மருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

* 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

* 21.8.1981 அன்று சட்ட சபையில் அரசின் சார்பில் கொண்டு வரப் பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றி னேன்.

* 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை - தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது.

* 2.9.1981 அன்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

* 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

* 15.9.1981 தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

* 27.7.1983 சென்னை யில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி

* 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி.

* 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

* 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழில கங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி.

* 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம்.

* 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்ட னக் கூட்டங்கள்.

* 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

* 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெ ழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் உண்ணாநோன்பு.

* 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவி களை ராஜினாமா செய் தோம்.

* 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. ஒரு மாத காலத்திற்கு விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

* ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னை யில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத் தில் 3000 பேரும், 17ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

* 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

* 23.8.1985 அன்று சந்திரஹாசன், பால சிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப் படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

* 30.8.1985 அன்று தமிழகத் தில் வேலை நிறுத்தப் போராட் டம். ஆயிரக் கணக்கானவர்கள் கைது.

* டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3ம் தேதி கோவையிலும், 4ம் தேதி திண்டுக்கல்லிலும், 5ம் தேதி தூத்துக்குடியிலும், 6ம் தேதி திருச்சியிலும், 7ம் தேதி சேலத்திலும், 13ம் தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்ட மான பேரணிகளும், கூட்டங் களும் நடைபெற்றன.

* 4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களை யெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக் கூட்டம்.

* 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு - கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள்.

* 3.6.1986 அன்று என்னு டைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

* 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

* 1987ஆம் ஆண்டு அக்டோ பர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

* 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்ட தற்காக கண்டன அறிக்கை.

* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர் களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

* 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது.

* 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம்.

* 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

* 6.11.1987 அன்று சென்னை யில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி.

* 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி

* 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

* 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் பிரதமர் ராஜீவுக்கு பதில் கடிதம்.

* 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன்.

* 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப் புலிக ளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோரு டன் சந்திப்பு.

* 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

* 4.1.1990 பல்வேறு போரா ளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

* 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக கழக ஆட்சி கலைக்கப் பட்டது.

* 17.7.1995 அன்று ஒவ் வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி

* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர் களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

* 30.11.1995 முழு அடைப்பு.

இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஆனால் இதனை யெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment