உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருள் தென் ஆப்ரிக்காவிலிருந்து குறைந்த விலைக்கு தருவதாக உறுதியளித் துள்ளதால் இந்தியாவில் உரத் தட்டுப்பாடு விரை வில் நீங்கும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
தென் ஆப்ரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்ஆப்ரிக்க சுற்றுப் பயணம் சிறப் பாகவும், நம் நாட்டுக்கு பயனுள்ளதாகவும் அமைந்தது. டி.ஏ.பி, எம்.ஏ.பி. போன்ற உரம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் இந் தியாவுக்கு அதிக அள வில் தேவைப்படுகிறது. அவற்றை தென் ஆப்ரிக் காவில் இருந்து அதிக அளவில் பெற வேண் டும் என்ற நோக்குடன் எனது சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டது. இதற்காக தென் ஆப்ரிக் காவில் உரத்திற்கான மூலப்பொருள்கள் தயா ரிக்க பயன்படும் கனி மவள பகுதிகளை பார் வையிட்டேன். தொடர்ந்து உரத்துக் கான மூலப் பொருள் தயாரிக்கப் படும் பிக் சர்ஸ்லே நக ரில் ஹாஸ் கர் தொழிற் சாலையைபார்வை யிட்டு, அந்த ஆலையின் சேர் மனிடம் ஆலோசனை நடத்தி னேன். இந்தியா வுக்கு அதிக அளவில் உரத் துக்கான மூலப் பொருள் தேவைப்படு கிறது. அதை தாராள மாக தருமாறு கேட்டுள் ளேன். இதை யடுத்து ஜோகன்னஸ் பர்க்கில் தொழில் வளத்துறை அதிகாரிகளுடன் குறைந்த விலையில் இந்தி யாவுக்கு அமிலம், மற் றும் ராக்போர்ட்ஸ் பாஸ்பரி என்ற பொருள் கிடைக்கவும் பேச்சு நடத்தி உள்ளோம். அவர்களும் முயற்சிப் பதாக உறுதி அளித்துள் ளனர். அமைச்சர் என்ற முறையில் நான் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 2ஆவது கட்டமாக மத்திய உரத் துறை அதிகாரிகள் விரை வில் தென் ஆப்ரிக்கா சென்று பேச்சு நடத்து வார்கள். இதன் மூலம் தென் ஆப்ரிக்காவில் இருந்து மூலப்பொருள் கள் அதிக அளவில் கிடைக்கும். நம்நாட் டில் டி.ஏ.பி, எம்.ஏ.பி. உரங் களின் உற்பத்தி அதிக ரித்து தட்டுப்பாடு இல் லாமல் உரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு மு.க.அழ கிரி கூறினார்.
No comments:
Post a Comment